நம்பி திருவிளையாடல்
நம்பி திருவிளையாடல் [1] எனப் போற்றப்படும் நூல் பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவரால் பாடப்பட்டது. இது பாடப்பட்ட காலம் 13 ஆம் நூற்றாண்டு. திருவிளையாடல் என்பது சிவபெருமான் நிருவிளையாடல்கள். வடமொழி நூல்களில் சிவபெருமானைப் பற்றிச் சொல்லப்பட்டவை. இது உண்மையில் ஒரு திருவிளையாடல் புராணம். சிவன் கதைகளை முதன்முதலில் தொகுத்துக் கூறிய நூல் இது.
இந்த நூலில் 1753 விருத்தப் பாடல்கள் உள்ளன. இவற்றில் மதுரைச் சொக்கநாதரின் 64 திருவிளையாடல்கள் பாடப்பட்டுள்ளன.
- பாயிரம்
- கடவுள் வாழ்த்து
- அவை அடக்கம்
- பதிகம்
- நூல்வரலாறு
- திருநகரச் சிறப்பு
- நூற்பயன்
என்னும் பகுப்புகளில் சொல்லப்பபட்டுள்ளது.
பாடல்கள் - எடுத்துக்காட்டு
தொகுசந்தப்பாடல்
- அருளுந்தொறும பொருளுந்திருந் தழகுந்தொகும் குலமும்தரும்
- பரிவொன்றுசந் ததியும்புகும் பழியஞ்சுமொண் பொடியும்பொருந்
- துருவுந்திறம் பிறவுந்துளங் கொளியும்பிறங் கறிவும்செழுந்
- திருவும்பெரும் புகழும்தருந் திருவம்பலம் திருவம்பலம்
சிவசின்னங்கள் எனப் போற்றப்படுவன உருத்திராச்சம், திருநீறு, நமச்சிவாய-மந்திரம் ஆகிய மூன்று. இவற்றில் மந்திரப் பயனைக் கூறும் பாடல்
- குலம் தரும் நீதி மிக்க குணம் தரும் வெதம் சொல்லும்
- பலம் தரும் உயர்ந்த சாயுச்சயம் தரும் ப.உது இலாத
- தலம் தரும் எல்லாம் வல்ல சயம் தரும் நிறைந்த செல்வ
- நலம் தரும் பெருமை குன்றா நயம் தரும் - நமச்சிவாய
மேலும் காண
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 156.
{{cite book}}
: Check date values in:|year=
(help)