நரிவிருத்தம்
நரிவிருத்தம் என்பது நிலையாமை கோட்பாட்டை விளக்கும் ஒரு தமிழ் அறநூல் ஆகும். இது 6-7-ஆம் நூற்றாண்டுகளில் திருத்தக்க தேவர் என்ற சமணரால் எழுதப்பட்டது. "திருஞான சம்பந்தரின் திருவாலவாய்ப் பதிகத்தில் சமணர்களின் மூன்று நூல்களைக் குறிப்பிடுகிறார்:
- எலி விருத்தம்
- கிளிவிருத்தம்,
- நரிவிருத்தம்",
இவற்றுள் நரிவிருத்தம் மட்டுமே எஞ்சியுள்ளது.[1]
எடுத்துக்காட்டுப் பாடல்
தொகு- இளமையும் வனப்பு நில்லா இன்பமும் நின்ற அல்ல
- வளமையும் வலிதுநில்லா வாழ்வுநாள் நின்ற அல்ல
- களிமகள் நேசம் நில்லா கைப்பொருள் கள்வர் கொள்வர்
- அளவிலா அறத்தின் மிக்க யாதும் மற்(று)இல்லை மாதோ
-நரிவிருத்தம் 15
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- நரிவிருத்தம் - மதுரைத் திட்டம்