நரேந்திர குமார் சுப்பா

இந்திய அரசியல்வாதி

நரேந்திர குமார் சுப்பா (Narendra Kumar Subba) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக சிக்கிம் மாநில அரசியலில் ஈடுபட்டார். சிக்கிம் சனநாயக முன்னணியின் வேட்பாளராக 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் மணிபோங் தெண்டம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பின்னர் இவர் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார். 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை பவன் சாம்லிங்ஙின் ஐந்தாவது அமைச்சகத்தில் நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, உணவு, குடிமைப் பொருள்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[1][2][3][4]

நரேந்திர குமார் சுப்பா
Narendra Kumar Subba
Member of the சிக்கிம் சட்டப்பேரவை சட்டமன்றம்
for மனிபோங் தெண்டம் சட்டப்பேரவை தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்சந்திர மாயா சுப்பா
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி (2019-முதல்)

1992 ஆம் ஆண்டில் மகாராட்டிர மாநிலம் பர்பானி நகரத்தில் உள்ள மராத்வாடா வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பர்பானி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவு அறிவியல் பாடத்தில் இளநிலை தொழில்நுட்பப் பட்டம் பெற்றிருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேந்திர_குமார்_சுப்பா&oldid=3879049" இலிருந்து மீள்விக்கப்பட்டது