நரேந்திர பிரசாத்

இந்திய மருத்துவர்

நரேந்திர பிரசாத் (Narendra Prasad) ஓர் இந்திய அறுவை சிகிச்சை நிபுணராவார். [1][2] பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை துறைகளின் முன்னாள் தலைவராகவும், இந்திய அறுவைசிகிச்சை சங்கத்தின் பீகார் மாநில அத்தியாயத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். [3] மருத்துவத் துறையில் நரேந்திர பிரசாத் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசு 2015 ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த இந்திய சிவில் விருதான பத்மசிறீ விருதை அவருக்கு வழங்கியது. [4] பிரசாத் பாட்னா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பாடத்தில் பட்டம் பெற்றார். 1962 ஆம் ஆண்டில் இராயல் கல்லூரியின் அறுவைசிகிச்சை உறுப்பினர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றார். [3]

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ச்சி நரேந்திர பிரசாத்திற்கு 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுதில்லியில் பத்மசிறீ விருதி வழங்கிய நிகழ்வு

மேற்கோள்கள் தொகு

  1. H. K. Sinha, தொகுப்பாசிரியர் (1998). Challenges in Rural Development. Discovery Publishing House. பக். 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788171414147. https://books.google.com/books?id=8Yk-h3PZ7awC&q=dr+narendra+prasad+patna&pg=PR6. 
  2. "Sehat". Sehat. 2015. Archived from the original on 2 ஏப்பிரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 மார்ச்சு 2015.
  3. 3.0 3.1 Chaudhary, Pranav (26 January 2015). "2 from Bihar get Padma Shri". Times of India. பார்க்கப்பட்ட நாள் 10 March 2015.
  4. "Padma Awards". Padma Awards. 2015. Archived from the original on 26 January 2015. பார்க்கப்பட்ட நாள் 16 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நரேந்திர_பிரசாத்&oldid=3046585" இலிருந்து மீள்விக்கப்பட்டது