நர்மதை நதி வலம் (நூல்)
நர்மதை நதி வலம், [1]நர்மதா பரிக்ரமாவை பற்றிய பயண நூல் ஆகும். தென்னகத்தில் கிரிவலம் பிரபலமாக இருப்பது போல், நர்மதை நதி வலம் வட இந்தியாவில் பிரபலமாக இருக்கிறது. மூல நூலில் அதன் ஆசிரியர் கே. கே. வெங்கட்ராமன் தாம் 131 நாட்களில் நர்மதை பரிக்ரமா செய்ததை விரிவாக எழுதியுள்ளார். ஆசிரியருக்கு, நர்மதை பரிக்ரமா செய்து முடிப்பதற்கு ஊக்கமளித்து, ஆசி வழங்கிய ராய்பூர், ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்த ஆசிரமத்தின் அந்நாள் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஆத்மானந்தஜி மஹராஜ்க்கு (1929-1989) தமது நூலைச் சமர்ப்பித்திருக்கிறார்.
நூலாசிரியர் | கே. கே. வெங்கட்ராமன் (ஆங்கில மூலம்) |
---|---|
மொழிபெயர்ப்பாளர் | சி. வரதராஜன் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
பொருண்மை | பயண நூல் |
வெளியீட்டாளர் | இராமகிருஷ்ண மடம், சென்னை |
வெளியிடப்பட்ட நாள் | மார்ச், 2013 |
பக்கங்கள் | 136 |
ISBN | 9788178836126 |
நூல் ஆசிரியர்
தொகுஇவர் இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணிபுரிந்தவர். பின்னர், கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்த கேந்திரம், அருணாசலப் பிரதேசத்தில் நடத்தி வரும் பள்ளிகளில் தன்னார்வத் தொண்டராக நிர்வாகத்தில் பணியாற்றியவர். அதிகமான ஊக்கத்துடன் அப்பணியில் தொடர ஒரு மாற்றம் தேவை என்று உணர்ந்ததால், நடைப் பயணத்துடன் கூடிய ஒரு புனிதப் பயணம் மேற்கொள்ள தீர்மானித்தார். அப்போது அவரது நண்பரால் ’நர்மதா பரிக்ரமாவை’ பற்றிக் கேள்விப்பட்டு அதில் ஈடுபாடு கொண்டார்.
அக்டோபர் 26, 1987 இல் துவங்கி மார்ச் 4 1988 இல் நர்மதா பரிக்ரமாவை நிறைவு செய்தார்.
நூல் உருவான விதம்
தொகுபயணம் நிறைவடைந்து 18 வருடங்கள் கழித்து, ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் மாத இதழில் 6 பகுதிகளாக 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பரிக்ரமா நிறைவடைந்து 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நூல் வடிவம் பெற்றது.
நூலின் உள்ளே
தொகுநர்மதை நதி பற்றிய பல்வேறு தகவல்களுடன், நதிக்கரையில் வாழும் மக்களின் எளிய நுட்பமான உணர்வுகளையும், தங்களுக்கு அடுத்த நாளுக்கான உணவு இல்லாத போதும், நர்மதை நதிவலம் வரும் யாத்திரிகருக்கு உணவு படைக்கும் அந்த மக்களின் உயர்ந்த குணநலனையும் ஆசிரியர் பதிவு செய்கிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-10. பார்க்கப்பட்ட நாள் 2014-06-30.