நல்லாவூர் கிழார்

நல்லாவூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அகத்திணைப் பாடல்கள் இரண்டு இவர் பாடியனவாக உள்ளன. அவை அகநானூறு 86, நற்றிணை 154

இவர் தரும் செய்திகள்

தொகு

அகநானூறு 86-ல்

தொகு
  • திணை - மருதம்
  • சங்ககாலத்தில் திருமணச் சடங்குகள் எவ்வாறு நிகழ்ந்தன என்பது இந்தப் பாடலில் விளக்கப்படுகிறது.

வதுவை நன்மணத்தில் பொதுமக்கள் சடங்கு

தொகு
விருந்து
தொகு
  • உழுத்தம்பருப்பு வடையுடன் பெருவிருந்து அளிக்கப்படும்.
மணமேடை
தொகு
  • பந்தல் போட்டுப் புதுமணல் பரப்பப்படும்.
  • மணப்பந்தலில் விளக்கு வைத்து மாலைகள் தொங்கவிடப்படும்.
  • நிறைமதி நாளில் விடியற்காலத்தில் திருமணம் நடைபெறும்.
திருமணச் சடங்கு
தொகு
  • பொதுமக்களின் ஆரவாரத்துடன் வயது முதிர்ந்த பெண்களில் சிலர் தலையில் நிறைகுடத்துடன் முன்னே வருவர். சிலர் புதிய அகல் விளக்குடன் பின்னே வருவர். இடையில் மணப்பெண் அழைத்துவரப்படுவாள்.
  • மக்களைப் பெற்றவரும், மங்கலநாண் எனப்படும் வாலிழை அணிந்தவருமாகிய மகளிரில் நான்கு பேர் மணப்பெண் தலையில் நீரில் நனைத்த பூக்களையும், நெல்லையும் தூவி வாழ்த்துவர்.
வாழ்த்து
தொகு

'கற்பினின் வழாஅ நற்பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆகு' என்பர்.
கற்பு நெறியில் வழுவாமல் வாழ்க. நல்ல குழந்தைகளாலும், பொருளாலும் பலவாறாகப் பலருக்கும் உதவி புரிக. உன்னைப் பெற்ற கணவனை விரும்பும் பிணையலாக (பெண்மானாக) நடந்துகொள்க - என்பர்.

முதல் இரவு

தொகு

பெற்றோர் தர 'பேர் இல் கிழத்தி ஆகு' என்று சொல்லி ஓரறையில் ஞெரேல் என மணமக்களைக் கூட்டுவிப்பர். மணமகள் குனிந்த தலையுடன் முகத்தைத் துணியால் மூடிக்கொண்டிருப்பாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு மணமகன் முகத்திரையை விலக்குவான். 'உன் விருப்பம் யாது' என்பான். அவள் மகிழ்ந்து அவனை வணங்குவாள். மதைஇய நோக்கோடு அவனைப் பார்ப்பாள். (பிறகு இணைவர்)

சொல் விளக்கம்
தொகு
  • உருந்து தலைப் பெய்த கொழுங்களி பிதவை = உழுந்த வடை
  • திதலை அவ்வயிறு = குழந்தைப் பேற்றுக்குப் பின்னர் சுருங்கி மடிப்பு விழுந்த கோடுகளை உடைய வயிறு
  • பெருஞ்சோற்று அமலை = பெருவிருந்து
  • பெற்றோன் = மனைவியைப் பெற்ற கணவன்
  • மதைஇய நோக்கு = மருண்ட பார்வை
  • வதுவை = திருமணச் சடங்கு
  • வாலிழை மகளிர் = தாலி அணிந்த மகளிர்

நற்றிணை 184-ல்

தொகு
  • திணை - குறிஞ்சி

நல்ல மழையில் அவன் வந்து அவளுக்காகக் காத்திருக்கிறான். இத்தகைய மழையில் வரக்கூடாது என்று தலைவியும் தோழியும் பேசிக்கொள்கின்றனர்.

பெருமழை. பேரிடி முழக்கம். அதனைத் தாங்கிக்கொண்டும், கேட்டுக்கொண்டும் கானம் 'கம்'மென்று இருக்கிறது. உழுவை என்னும் வேங்கைப்புலி யானையை வலப்பக்கமாக வீழ்த்திவிட்டு உரறுகிறது. இத்தகைய அச்சம் தரும் இரவில் அவர் வராமல் இருந்தால் நல்லது. (திருமணம் செய்துகொண்டு உடனிருக்க வேண்டும் என்பது அவர்கள் கருத்து)

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லாவூர்_கிழார்&oldid=2718092" இலிருந்து மீள்விக்கப்பட்டது