நல்லிசை வஞ்சி

நல்லிசை வஞ்சி என்பது புறநானூற்றுப் பாடல் ஒன்றுக்குச் [1] சுட்டப்பட்டுள்ள துறை. இது வஞ்சித்திணையின் பகுதியாக வருகிறது.

படையெடுத்துச் சென்ற தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் படையிலுள்ள யானைகள் பகைநாட்டுக் குடிநீர்த் துறைகளைக் கலக்கிப் பாழாக்கினவாம். முருகனின் படைவீரர்கள் போன்று இவனது படையிலிருக்கும் வில்லாளிக் கூளியர் வேண்டியதை எடுத்துக்கொண்டு வீசிய மிச்சில் காடெங்கும் இறந்துகிடந்தனவாம். காவல்மரம் வெட்டப்படும் ஓசை கேட்டு ஊர் நடுங்கிக்கொண்டிருந்த்தாம். இப்படியெல்லாம் வெற்றிச் சிறப்புகள் போற்றப்படுவதால் இது நல்லிசை வஞ்சி.

அரசனின் விறலை (வெற்றியை)க் கூறுவது நல்லிசை வஞ்சி எனப் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.[2]

பகைவனை அழிக்கப் படையெடுத்துச் செல்வது வஞ்சித்திணை என்று குறிப்பிடும் தொல்காப்பியம் [3] இந்தத் துறையைத் தனியே குறிப்பிடவில்லை.

அடிக்குறிப்பு

தொகு
  1. புறநானூறு 23
  2. புறப்பொருள் வெண்பாமாலை 59.
  3. தொல்காப்பியம் புறத்திணையியல் 6
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்லிசை_வஞ்சி&oldid=1551239" இலிருந்து மீள்விக்கப்பட்டது