நல்லூர்கோணம்
நல்லூர்கோணம் (Nalloorkonam) என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை ஊராட்சிக்கு உட்பட்;ட ஒரு சிறிய கிராமமாகும். இங்கு இரப்பர் விவசாயம் மிகுதியாக மேற்கொள்ளப்படுகிறது. இங்கு குளங்கள் நிறைய உள்ளன. போதுமான மழை ஆண்டு முழுவதும் கிடைப்பதால் விவசாயம் இக்கிராம மக்களின் முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு 'அயனிமூட்டுத் தம்புரான்' என்ற கோயில் உள்ளது. சுமார் 15 வருடங்களுக்கு முன் நல்லூர்கோணம் கிராமத்தில் மண்ணிற்கு அடியில் புதையுண்டு இருந்த முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்நிகழ்வு இதுவரை உலகிற்கு அறிவிக்கப்படவில்லை