நல்லூர் கைலாசநாதர் கோயில்

நல்லூர் கைலாசநாதர் கோயில் இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூரில் அமைந்துள்ள சிவனுக்கு உரிய கோவில் ஆகும்.

வரலாறு தொகு

யாழ்ப்பாண வரலாற்று நூற் சான்றுகளின் படி யாழ்ப்பாண அரசை நிறுவியவனாகிய சிங்கை ஆரியன் தலைநகரான நல்லூரிலே அரண்மனையையும், அதன் அயலிலே முருகன் கோயிலையும், கிழக்கே வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும், வடக்கே சட்டநாதர் ஆலயம் மேற்கிலே வீரமாகாளி அம்மன் கோயில் தெற்கிலே கைலாசபிள்ளையார் கோயில், கைலாசநாதர் கோயில், கைலைநாயகி கோயில் ஆகியவற்றைக் கட்டினார் என அறியப்படுகின்றது.[1]

யாழ்ப்பாண வரலாற்றின் மூல நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் கைலாயமாலை இக் கோயில் தொடர்பில் எழுந்த ஒரு நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

பூசைகள் தொகு

வேதாகம முறைப்படி நித்திய நைமித்திய பூசைகள் நடைபெறுகின்றன. நாடோறும் ஆறுகாலப்பூசைகள் நடைபெறுகின்றன. மகோற்சவங்கள் பிள்ளையாருக்கு சித்திரையிலும் சிவனுக்கு ஆனியிலும் நடைபெறுகின்றன.

ஆதாரங்கள் தொகு

  1. வித்துவான் வசந்தா வைத்திய நாதன் எழுதிய "ஈழத்துச் சிவாலயங்கள்"

வெளி இணைப்புகள் தொகு