நல்விளக்கனார்
நல்விளக்கனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். நற்றிணை 85 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
நற்றிணை 85 பாடல் தரும் செய்தி
தொகுதலைவன் ஊரில் கொடிச்சியர்(மலைமகளிர்) கிழங்கும் முள்ளம்பன்றிக் கறியும் விருந்து படைப்பார்களாம். அவன் தலைவியை நாடி வந்திருப்பதைத் தோழி தலைவிக்குச் சொல்லுகிறாள்.
வரவேண்டாம் ஐய! ஊரார் அலர் தூற்றினாலும் பரவாயில்லை. புலிக்குப் பயந்து யானை தன் கன்றைப் பாதுகாத்துக்கொண்டே செல்லும் கொடுமையான வழியில் வாரற்க தில்ல.