நளாயினி என்பவள் மகாபாரதத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரம் ஆகும். இவள் நளராசனின் மகள் ஆவாள். கற்புக்கரசியாக புராணக் கதைகளில் சித்தரிக்கப்படுகிறாள். தனக்கு இந்திரன் போன்ற கணவன் வேண்டும் என சிவனை ஐந்து முறை வேண்டினாள். ஐந்து முறை வேண்டியதால் உனக்கு ஐந்து கணவர் அமைவர் என சிவனும் வரமருளினார். இந்த வரம் தனக்கு மறுபிறவியில் பலிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டாள். பின் விதி வசத்தால் மௌத்கல்ய முனிவரை மணந்தாள். இவளே அடுத்த பிறவியில் திரௌபதியாகப் பிறந்து ஐந்து கணவர்களை மணந்து கொண்டாள் என மகாபாரதம் கூறுகிறது.[1]

கற்பின் திறம் தொகு

பெருநோய் வந்த தனது கணவன் மௌத்கல்ய முனிவரை தேவதாசியிடம் சேர்க்க கூடையில் வைத்து எடுத்துச் சென்றாள். அவ்வாறு செல்லும்போது அந்நாட்டின் அரண்மனையில் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மாண்டவ்யர் என்ற முனிவர் கழுவிலேற்றப்பட்டிருந்தார். நளாயினி தன் கணவனைச் சுமந்து சென்ற கூடையின் ஒரு முனை அக்கழுவில் இடித்தது. வலியால் துடித்த மாண்டவ்ய முனிவர் உனது கணவன் சூரியன் உதித்தால் உயிர் துறப்பான் எனச் சபித்தார். உடனே நளாயினி சூரியன் உதிக்காமல் ஆகக் கடவது என மறுசாபம் இட்டார். மூன்று நாட்கள் சூரியன் உதிக்கவில்லை. நடந்ததை அறிந்த மன்னன் மாண்டவ்யரிடம் பொறுத்தருளுமாறு வேண்டி அவரைக் கழுமரத்திலிருந்து இறக்கினான். மாண்டவ்யரும் உலக நலனுக்காக நளாயினியிடம் சூரியன் உதிக்க உத்தரவிட வேண்டினார்.

சான்றுகள் தொகு

  1. என். நாராயணராவ், இதிகாச தேவதைகள், வானதி பதிப்பகம். 2013, பக் 96-98
"https://ta.wikipedia.org/w/index.php?title=நளாயினி&oldid=3677673" இலிருந்து மீள்விக்கப்பட்டது