நளினி பேக்கல்

இந்திய எழுத்தாளர்

நளினி பேக்கல் (Nalini Bekal) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மலையாள நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளராவார். [1] இவர் பல நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எழுதி மாத்ருபூமி நாவல் விருது (1977), எடச்சேரி விருது (1987), பாரத மாநில வங்கி விருது (1992) மற்றும் கேரள சாகித்ய அகாடமி உறுப்பினர் விருது உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

நளினி பேக்கல்
Nalini Bekal
பிறப்புநளினி
15 அக்டோபர் 1954 (1954-10-15) (அகவை 69)
பேக்கல், காசர்கோடு
தொழில்மலையாள எழுத்தாளர்
மொழிமலையாளம்
தேசியம்இந்தியர்
கல்விஇளங்கலை
குறிப்பிடத்தக்க படைப்புகள்முச்சிலோட்டம்மா,ஒட்டக்கோலம்,
துணைவர்பாய்பிரா ராதாகிருட்டிணன்
பிள்ளைகள்அனுராதா, அனுயா அக்காதுட்டு

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

நளினி கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள பேக்கல் கிராமத்தில் பிறந்தார். நளினியின் கணவர் பாய்பிரா ராதாகிருட்டிணன் மலையாள மொழியில் பிரபலமான எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் விமர்சகர் ஆவார். இவர்களுக்கு அனுராதா (ஆயுர்வேத மருத்துவ அதிகாரி) மற்றும் அனுயா அகத்தூட்டு ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

படைப்புகள் தொகு

நாவல்கள்
  • துருத் (1977)
  • அம்சகானம் (1982)
  • கிருஷ்ணா (1985)
  • முச்சிலோட்டம்மா (1987)
  • கண்வதீர்த்தா (1988)
  • சிலாவனங்கள் (1993)
சிறுகதைத் தொகுப்புகள்
  • ஒட்டக்கோலம் (1993)

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் தொகு

இலக்கிய விருதுகள்
  • 1977: துருத்து நாவலுக்கு மாத்ருபூமி நாவல் விருது
  • 1987: முச்சிலோட்டம்மாவுக்கு எடச்சேரி விருது மற்றும் பாரத மாநில வங்கி விருது
உறுப்பினர் விருது
  • 1995: கேரள சாகித்ய அகாடமி உறுப்பினர்

மேற்கோள்கள் தொகு

  1. "Who is who of Indian writers". Who is who of Indian writers. Retrieved 13 April 2015

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=நளினி_பேக்கல்&oldid=3935019" இலிருந்து மீள்விக்கப்பட்டது