நவசூதிகா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 47 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப்படும் 8 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய சுவர்ணாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), பிரதிமத்திமம் (ம2), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவசூதிகா&oldid=1665877" இலிருந்து மீள்விக்கப்பட்டது