நவரை (மீன் குடும்பம்)
நவரை | |
---|---|
மஞ்சள் துடுப்பு நவரை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | கதிர்முள் துடுப்பி
|
வரிசை: | கீளி வடிவி
|
குடும்பம்: | நவரை
|
நவரை (goatfish) என்பது கீளி வடிவி ஒழுங்கைச் சேர்ந்த மீன் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் மொத்தம் 6 பேரினங்களாக மொத்தம் 88 இனங்கள் உள்ளன.[1] இவை உலகம் முழுவதும் உள்ள வெப்ப, வெப்பவலய மற்றும் மிதவெப்பவலய நீர்ப்பகுதிகளில் வாழ்கின்றன. இவை அடிக்கடி நிறம் மாறும் திறன் கொண்டவை.
பண்புகள்
தொகுநவரை மீன்களிடம் ஆட்டுத்தாடி போன்ற இரு உணரிழைகள் காணப்படும். இந்த உணரிழைகள், நவரை மீன்களுக்கு மணல் மற்றும் பவளப்பாறை ஓட்டைகளில் உணவு தேட உதவும் வேதியியல் உணர்வி உறுப்புகளைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "FAMILY Details for Mullidae - Goatfishes". www.fishbase.org. பார்க்கப்பட்ட நாள் 5 April 2016.