நவலூர் குட்டப்பட்டு அடைக்கல அன்னை ஆலயம்

Facebook: https://www.facebook.com/ladyofrefuge/


நவலூர் குட்டப்பட்டு அடைக்கல அன்னை ஆலயம் (Navalur Kuttapattu, Lady of Refuge Church) 17ம் நூற்றண்டில் கட்டப்பட்டதாக சில குறிப்புக்கள் மூலம் அறிய முடிகிறது. (அநேகமாக வீரமாமுனிவர் வருகைக்கு பிறகு கட்டப்பட்டது என்று வாய் வழி கருத்து நிலவுகிறது) ஆலயத்தை 19 ஆம் நூற்றண்டில் விரிவாக்கப்பட்டுள்ளது. அப்பொழுது ஆலயத்தின் முன்புறம் 66 அடி உயர கோபுரம் கட்டப்பட்டுள்ளது. அருகில் உயர்ந்த மணிக்கூண்டும் உள்ளது. இக்கோபுரம் எழுப்பி ஐம்பது ஆண்டுகள் ஆகிரது (1972-2022).

ஆலய தோற்றம்

தொகு

இவ்வாலயம் வீரமாமுனிவரின் வருகையால் மனம் திரும்பிய மக்களால் கட்டப்பட்டுள்ளது. ஆலயம் அமைந்துள்ள பகுதி முழுவதும் மக்களால் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. எந்த கிறிஸ்தவ மத அமைப்புகளின் தலையிடும் இல்லாமல் மக்களால் பல ஆண்டுகள் பராமரிக்கப்பட்டு, மதவழிபாடுகள் நடைபெற்றுவந்தன. 18 ஆம் நூற்றண்டில் மக்களிடையே ஏற்பட்ட பிரச்சனையால் ஆலயம் பல ஆண்டுகள் மூடப்பட்டு இருந்தது. அதன் பிறகு சில பெரியவர்களால் மீண்டும் திறந்து வைக்கப்பட்டு மேலும் ஆலயத்தை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆலயம் முன்புற தோற்றம்:

தொகு

பெரியவர்களின் முடிவுக்கு ஏற்றாற்போல் பலராலும் பொருள் மற்றும் இட உதவி அளிக்கப்பட்டு ஆலயம் விரிவாக்கப்பட்டது. ஆலயம் அடித்தளம் எதுவும் போடாமல் பலகை கற்களால் பரப்பப்பட்டு அதன் மீது ஆலய சுவர்கள் சுண்ணாம்பு, வெல்லம், கடுக்காய்த்தூள் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட கலவைகளால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரம் கட்டும் பணியை காலஞ்சென்ற ஆரோக்கியம், செபஸ்தியார், யாகப்பன், துரைசாமி, ஆபிரகாம் ஆகியோரின் முயற்சியால் கட்டப்பட்டடுள்ளது.

ஆலயப் பராமரிப்பு பணி:

தொகு

ஊர் மக்கள் நியமிக்கப்படும் மணியக்காரர்கள் குழு ஆலய மேலாண்மை பணியை செய்துவருகிறது. மணியக்காரர்கள் குழு, 12 கொத்து மணியகாரர்களையும் மற்றும் 2 மணியகாரர்களையும் கொண்டுள்ளது. இந்த குழுவால் வரவு செலவு கணக்குகள் பராமரிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த குழு மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த ஆலயம் அம்சம் பங்கை சேர்ந்தது. AMSAM - Anaithu Makkalin Sahaya Annai Maiyam. இது ஒரு சலேசிய பங்கு, சலேசிய குருக்களால் திருவாலிபாடுகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.