நவாலி களையோடை கண்ணகி அம்மன் கோவில்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (திசம்பர் 2016) |
ஆலய வரலாறு
தொகுகர்ண பரம்பைரயாக வந்த ஆலயமாகும். கண்ணகி மதுரையை எரித்து விட்டு மாதகல் அக்கண கடவையில் வந்து இறங்கி அராலி அம்மன் கோவிலை வந்தடைந்து அங்கிருந்து கடற்கரை வழியாக வரும் போது ஆறு பெருகிய காரணத்தால் வயலின் நடுவில் உள்ள ஒரு மண்பிட்டியில் தங்கியிருந்தார். அந்த மண் பிட்டியை பத்தை நாச்சியார் பிட்டி என்று தற்போது அழைக்கப்படுகின்றது. தலை விரி கோலத்துடன் வயது முதிர்ந்த மாதுவாக நாச்சியார் பிட்டியில் இருந்து இறங்கி அவ் வழியாக நடந்து வந்து கொண்டிருக்கையில் வயலில் மந்தைகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நின்றான். அவன் அருகே வந்த மூதாட்டி தம்பி எனக்கு சரியாக தலை கடிக்கின்றது. எனக்கு நீ பேன் பார்த்து விடுறாயா? எனக் கேட்டாள் ஆச்சி. அதற்கு அந்த சிறுவன் எனக்கு சரியாக தாகமாக இருக்கிறதுஇ நீ எனக்கு தண்ணீர் தந்தால் உனக்கு நான் பேன் பார்த்து விடுகிறேன் எனக் கூறினான். உடனே தனது கையில் இருந்த பொல்லினால் (முதியவர்கள் கையில் வைத்திருக்கும் கைத்தடி) நிலத்தில் ஊன்றினார். அங்கு அதில் இருந்து தண்ணீர் உருவாகியது. உடனே சிறுவன் நீரை குடித்து விட்டு பேன் பார்ப்பதற்காக. தலையை விரித்துப்பார்த்ததும் தலை முழுவதும் கண்கள் காணப்பட்டன ஆச்சரியமடைந்த சிறுவன். உடனே ஓடி அயலில் உள்ளவர்களைக் கூட்டி வந்தான் மூதாட்டி நான் நித்தம் ஆயிரம் பிழைகளை பொறுக்கின்றேன் என்னை இதில் வைத்து ஆதரியுங்கள் என்று கூறி மறைந்துவிட்டார். அதன் பிறகு தான் அவ்விடத்தில் உருவாக்கப்பட்ட ஆலயமே நவாலி களையோடை கண்ணகி அம்மன் கோவிலாகும். இவ்வாலயத்திற்கு பூசகர் மந்திரம் ஓதி பூசை செய்வதில்லை மரபு முறையான பூசை வழிபாடே நடைபெறுகின்றது. அமைக்கப்பட்டதாகவும் பொல்லினால் ஊன்றிய இடத்தில் கிணறு ஒன்றும் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.
ஆலய அமைவிடம்
தொகுஇலங்கை திருநாட்டினிலே யாழ் மாவட்டத்தில் நவாலி என்னும் ஊரில் களையோடை கண்ணகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயம் வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் வயல்கள் சூழவுள்ள மத்தியில் ஏகாந்தமாய் அமர்ந்து அம்மாள் கோயில் கொண்டுள்ளார். இவ் ஆலயத்தை சூழ அருகில் முருகப்பெருமான் ஆலயமும், பிள்ளையார் ஆலயமும், நாகலிங்கேஸ்வரர் ஆலயமும் ஒருங்கே அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.
ஆலயத்தின் சிறப்பு
தொகுகண்ணகி அம்மன் ஆலயம் அடியார்களது நம்பிக்கைக்குரிய தலமாக விளங்குகின்றது. அடியார்களது நம்பிக்கைக்குரிய தலமாக விளங்குகின்றது. அடியார்கள் நேர்த்திக்கடனாக பொங்கல், அவியல் குத்து விளக்கு போன்றவை செய்வது உண்டு. இவற்றோடு பெற்றோர் குழந்தைகளை விலை கொடுத்து வாங்குதல், குழந்தைகளுக்கு அமுதூட்டல் என்பன மதியப்பூசையின் போது நடைபெறும். இவ்வாலயத்தின் மகிமை அறிந்து பல ஊர்களிலிருந்து வந்த அவர்களின் நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள்.
பூசைகளும் விழாக்களும்
தொகுகளையோடை கண்ணகி அம்மன் லயத்தில் கிராமிய முறைப்படியே பூசைகள் நடைபெறும். இங்கு நித்திய பூசை நடைபெறும். மேலும் இவ்வாலயத்தில் பங்குனி திங்கள், வைகாசி விகாகம். ஆடி பூரம் நவராத்திரி திருவெண்பா என்பன இங்கு அனுஸ்ரிக்கப்படும். இதற்கு விசேட பூசைகளும் அன்னதானங்களும் கொடுக்கப்படும் திருவிழாக்களில் ஆடி பூர திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். அவ்வாலய பூர திருவிழாக்களை ஆலயத்தினை நிர்வாகிக்கும் 10 குடும்பங்கள் முன்னின்று நடத்துவர். இவ்வாலயத்தின் திருவிழாவின் போது சுவாமி உள் வீதி உலா வருகின்றமை சிறப்பம்சமாகும். இக்காலத்தில் ஆலயத்தில் சமய சொற்பொழிவுகள் மேள கச்சேரி, கரகம், மயிலாட்டம், ,கற்பூரம் ஏந்துதல், அங்க பிரதட்சனம் செய்தல், முதலான நேர்த்தி கடன்களும் இடம்பெறும்.
பத்தை நாச்சியார் பிட்டி
தொகுஇந்திய இராணுவ சிப்பாய்கள் ஒரு மாது காட்சியளிப்பதை கண்டு பயந்து துப்பாக்கியினால் சுட்டனர். துப்பாக்கியில் இருந்து சன்னம் எதுவும் சுடுபடவில்லை. பயந்து போய் அதிகாரிகளுக்கு அறிவிக்க அவர்கள் அயலவர்களிடம் சென்று இது பற்றி விசாரித்தனர். அப்போது கிராம வாசிகள் மதுரையை எரித்த கண்ணகி தான் இங்கு இருக்கின்றார் எனக் கூற எங்களது மதுரை நாட்டு அம்மாவா இங்கு வந்துள்ளார் என கை கூப்பி வணங்கி அன்று தொடக்கம் வெள்ளிஇ ெசவ்வாய்களில் அம்மனுக்கு பூசை செய்து வழிபட்டனர்.
ஆலய கிணற்றின் சிறப்பு
தொகுகண்ணகியம்மன் சிறுவனுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக பொல்லினால் ஊன்றிய போது உருவாகிய குழி போன்ற இடமே தற்போது கிணறு போல் காட்சியளிக்கின்றது. மேற்கட்டிடம் பாதுகாப்பிற்காக கட்டப்பட்டாலும் உள்ளே எதுவித மாற்றமும் செய்யப்படாமல் பழமை வாய்ந்ததாகவே காணப்படுகின்றது. இக் கிணற்றில் கோடை காலத்திலும் நீர் வற்றாமல் அதே அளவில் நீர் காணப்படவது இதன் சிறப்பில்பாகும்.