நவாஸ் கனி

இந்திய அரசியல்வாதி

நவாஸ் கனி (Navaskani, பிறப்பு: மே 14 1979) ஓர் இந்திய அரசியல்வாதியும், 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், இராமநாதபுரம் தொகுதியிலிருந்து, இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

நவாஸ் கனி
நவாஸ் கனி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்அன்வர் ராஜா
தொகுதிஇராமநாதபுரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 மே 1979 (1979-05-14) (அகவை 45)
இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சி இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
பிள்ளைகள்2

பிறப்பு

தொகு

இவர் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்திலுள்ள, குருவாடி என்னும் ஊரில் காதர் மீரா கனி - ரம்ஜான் பீவி தம்பதியருக்கு 1979 ஆம் ஆண்டு மே 14 நாளன்று மகனாக பிறந்தார். பள்ளிப் படிப்பை கடலாடியில் முடித்த பிறகு படிப்படியாக தொழிலில் உயர்ந்து நின்று எஸ். டி. கூரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக விளங்குகின்றார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "பணம் கொடுத்த வெற்றியல்ல... ஜனம் கொடுத்த வெற்றி! - நவாஸ்கனி நறுக்..." விகடன் (சூன் 01, 2019)
  2. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்". பிபிசி தமிழ் (மே 23, 2019)
  3. "எஸ்.டி கொரியர் முதல் தேர்தல் பணிகள் வரை.. ஐயூஎம்எல் ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ் கனி யார்".[தொடர்பிழந்த இணைப்பு] ஒன்இந்தியா தமிழ் 01, 2019)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவாஸ்_கனி&oldid=3995391" இலிருந்து மீள்விக்கப்பட்டது