நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் என்பது ஜெயமோகன் எழுதிய ஓர் இலக்கிய அறிமுக நூல். ஒரு எளிய தொடக்க நிலை வாசகரை மனதில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகப்படுத்தும் நோக்குடன் இந்நூலை எழுதியுள்ளார். இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடிய இதனை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
உள்ளடக்கம்
தொகு- இந்நூலின் முதல் பகுதி எளிய வாசகனுக்கு இலக்கியம் அறிமுகமாகும்போது ஏற்படும் ஐயங்களைப் பற்றிப் பேசுகிறது. விளக்கங்களை அளிக்கிறது. எப்படி வாசிப்பது என்று கற்பிக்கிறது.
- இரண்டாம் பகுதி நவீனத் தமிழிலக்கிய வரலாற்றை கிட்டத்தட்ட நூறு பக்கம் அளவுக்கு அளிக்கிறது.
- மூன்றாம் பகுதி நவீனத் தமிழிலக்கியத்தை வாசிப்பதற்கான விரிவான பரிந்துரைகள் அடங்கியது. சிறந்த புதினங்கள், சிறந்த சிறுகதைகள், சிறந்த கவிதைகள், சிறந்த கட்டுரை நூல்களைப் பட்டியலிடுகிறது.
- நான்காம் பகுதி இலக்கிய இயக்கங்களையும் இலக்கியக் கொள்கைகளையும் சுருக்கமாக அறிமுகம் செய்கிறது.
- ஐந்தாம் பகுதியில் இலக்கிய வாசிப்புக்கு உதவக்கூடிய 200 இலக்கியக் கலைச்சொற்களை விளக்கத்துடன் அளித்துள்ளார்.