நவ்டெக்ஸ் (Navtex) என்பது நேவிகேஷனல் டெலக்ஸ் என்பதன் சுருக்கம் ஆகும். இக்கருவி இந்திய மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகம், மீனவர்களுக்கு பிப்ரவரி 2013 முதல் இக்கருவியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

NAVTEX ரிசீவரின் தோற்றம்

நோக்கம்

தொகு

தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இப்பகுதியில் 15 ஆயிரம் விசைப்படகுகளும், 25 ஆயிரம் பைபர் படகுகளும், நுாற்றுக்கணக்கான கட்டுமரங்கள் கொண்டும் 50 லட்சம் பேர் மீன் பிடிக்கின்றனர். தமிழக கடல் எல்லை மட்டும் திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் துவங்கி, கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி வரையிலும் 1,078 கி.மீ தூரம் கொண்டு அமைந்துள்ளது. இப்பகுதில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இயற்கை சீற்றங்களினாலும், இலங்கை கடல்படையினரிடமும் சிக்கி நாள்தோறும் அவதிப்படும் செய்திகள் நடக்கிறது. இக்கருவியின் உதவியால் மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லாமலும், இலங்கை ராணுவத்திடம் சிக்காமலும் இருக்க உதவும்.[1]

செயல்பாடு

தொகு

ஒரு நாட்டின் கடல் எல்லையானது 12 கடல் மைல்கள் (கடல் மைல் 1.85 கி.மீட்டர்) என வரைமுறை செய்யப்பட்டுள்ளது. இதனால் படகானது 12 கடல் மைல் கடந்தாலே இக்கருவி 'பீப்' ஒலியை எழுப்பி, மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்யும். இதன் துணையால் விசைப் படகுகளில், ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க முடியும்.[2][3]

 
நகரத்தில் உள்ளவர்களின் ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பு ("ஜிபிஎஸ் ஊடுருவும் முறை ") கடல் சார் பயன்பாட்டு முறைகளில் பயன்படுத்தப்படுகிறது

வகைகள்

தொகு

ஊடுருவல் உபகரணங்கள் கடல் தொடர்பு தந்தி அனுப்பும் கலை

மேற்கோள்

தொகு
  1. http://www.nws.noaa.gov/om/marine/navtex.htm
  2. http://www.dinamalar.com/news_detail.asp?id=856456
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-06. பார்க்கப்பட்ட நாள் 2013-11-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவ்டெக்ஸ்&oldid=3560215" இலிருந்து மீள்விக்கப்பட்டது