நவ கன்னியர்
நவ கன்னியர் என்பவர்கள் சைவ சமயத்தில் வழிபடப்படுகின்ற ஒன்பது கன்னிகள் ஆவார்கள்.[1] நவ என்றால் ஒன்பது என்று பொருளாகும். இவர்களை நவ சக்திகள் என்றும் அழைப்பர். சைவ சமயத்தில் சர்வபூதமணி, மனோன்மணி, பலப்ரதமணி, பலவிகரமணி, காலவிகாரணி, காளி, ரவுத்திரி, ஜேஷ்டை, வாமை ஆகியோர் நவ சக்திகளாவர்.
நவ சக்தி வழிபாடு
தொகுஇந்த நவ கன்னியரை வழிபடுகின்ற முறைக்கு நவ சக்தி வழிபாடு என்று பெயர். சைவ சமய ஆதினங்களில் இந்த நவ சக்தி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. ஆதினங்களுக்கு உட்பட்ட கோயில் ஒன்பது சிவாச்சாரியார்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொள்வார்கள். அவர்கள் ஒரே நேரத்தில் இறைவிகளின் பெயர்களை உச்சரித்து, மலர் தொடுத்து வழிபடுகின்றனர். [2]