நஸ்னீன்

பாலிவுட் நடிகை

நஸ்னீன் ( Nazneen ) 1970கள் மற்றும் 1980களில் தீவிரமாக செயல்பட்ட ஓர் பாலிவுட் நடிகை ஆவார். இவர் 23 பிப்ரவரி 1958 அன்று கொல்கத்தாவில் பிறந்தார். தனது பெற்றோருடன் மும்பை செல்வதற்கு முன்பு இலக்னோவில் கல்வி கற்றார். ஒரு விருந்தில் இயக்குனர் சத்யன் போசைச் சந்தித்த பிறகு, அவர் இவருக்கு ச-ரி-க-ம-ப (1972) என்ற படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். பின்னர் கோரா ககாஸ் (1974), சல்தே சல்தே (1976) மற்றும் தில்தார் (1977) ஆகிய வெற்றி திரைப்படங்களில் நடித்தார்.[1] பி. ஆர். சோப்ரா தயாரிபில் அவரது மகன் ரவி சோப்ரா இயக்கத்தில் 1988 அக்டோபர் 2 முதல் 1990 சூன் 24 வரை தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட மகாபாரதம் என்ற வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடரில் நஸ்னீன் பாண்டவ சகோதரர்களின் தாயார் குந்தியாக நடித்திருந்தார்.

Nazneen
பிறப்புNazneen
Kolkata, West Bengal, India
தேசியம்Indian
பணிActress
செயற்பாட்டுக்
காலம்
1972 – 1990
குறிப்பிடத்தக்க படைப்புகள்Sa-Re-Ga-Ma-Pa
Chalte Chalte
Mahabharat

ஆரம்பகால வாழ்க்கை. தொகு

நஸ்னீன் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு அச்சகத்தை வைத்திருந்தார். நஸ்னீன் ஹில் கிரெஞ்ச் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.[2] நடிகை நீது சிங் இவருடன் அதே பள்ளியில் பயின்றார்.[3]

தொழில் வாழ்க்கை தொகு

இவரது உறவினர் ஒருவரால் நடத்தப்பட்ட விருந்தில், மேரே ஹம்சஃபர் (1970) திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் யூசுப் தீந்தர்வாஜவல்லா மற்றும் இயக்குனர் சத்யன் போஸ் ஆகியோர் இவரைச் சந்தித்து தங்களது ச-ரி-க-ம-ப (1972) படத்தில் இவருக்கு ஒரு பாத்திரத்தை வழங்கினர்.[2]

சத்யன் போஸ் இயக்கத்தில் இன்னும் இரண்டு படங்களுக்கு நஸ்னீன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அவற்றின் தயாரிப்பில் முன்னேற்றமில்லை. ஆனால் மூத்த இயக்குனரின் கீழ் பணிபுரிந்தது இவருக்கு நிறைய உதவியது. நஸ்னீனுக்கு ஒரு திரைப்பெயர் இருக்க வேண்டும் என்றும் சத்யன் போஸ் விரும்பினார். அவர் சுவர்ணா என்ற பெயரைப் பரிந்துரைத்தார். பின்னர் சோனாலி என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், இவர் தன்னை நஸ்னீன் என்று தேர்வு செய்தார்.[2]

1974 ஆம் ஆண்டில் இவர் கோரா ககாஸ் படத்தில் நடித்தார். இது விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. இந்தப் படத்தில் செய பாதுரி பச்சனின் சகோதரியாக நடித்தார். கோரா ககாஸுக்குப் பிறகு இவருக்கு பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் அனைத்தும் “ஒரு சகோதரியின் பாத்திரமாகவே இருந்தது”.[2]

ஏற்கனவே ஒரு சில படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்திருந்த காரணத்தால் நஸ்னீன் இந்த வாய்ப்புகள் அனைத்தையும் மறுத்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நஸ்னீன்&oldid=3914043" இலிருந்து மீள்விக்கப்பட்டது