நாகதஷ்ட விரதம்
நாகதஷ்ட விரதம் என்பது ஒரு வருடத்திற்கு நாகபஞ்சமி விரத்தினை கடைபிடிப்பதாகும்.[1]
நாகதஷ்ட விரதத்திற்கு ஏதேனும் ஒரு கருட பஞ்சமி நாளில் விரதத்தினை தொடங்குகிறார்கள். அதன் பின்பு ஒரு நாகாப்பஞ்சமியில் தொடங்கி ஒரு வருடத்திற்கு வருகின்ற அனைத்து நாகபஞ்சமிகளிலும் பூசை செய்ய வேண்டும். இந்த காலத்தில் 13 பஞ்சமிகள் வருகின்றது.
பஞ்சமி திதி
தொகுபஞ்சமி என்றால் திதியின் ஐந்தாம் நாள் திதியாகும். இந்த பஞ்சமி திதியை பூரண திதி என்கின்றனர். இந்த திதியன்று சப்த கன்னியரில் வராகியம்மனை வழிபடுபவர்களும் உள்ளனர்.
நாக வழிபாட்டில் உள்ளவர்கள் பஞ்சமி திதியை நாக ராஜனுக்கு உகந்த நாளாக கருதுகின்றனர். ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் வருகின்ற பஞ்சமி திதியை ஒரு கண்ணுள்ள திதி என்று கூறும் வழக்கமுள்ளது.
ஆதாரங்கள்
தொகு- ↑ தினமலர் பக்திமலர் 13.08.2015 பக்கம் 3