நாகப்பட்டினம் நாகநாதசுவாமி கோயில்

நாகப்பட்டினம் நாகநாதசுவாமி கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

தொகு

இக்கோயில் நாகப்பட்டினம் சட்டநாதர் கோயிலின் வடக்கு வீதியில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

தொகு

இக்கோயிலில் ஆதிசேசன் வணங்கிய நாகநாதசுவாமி மூலவராக உள்ளார். உலகநாயகியாக அகிலாண்டேஸ்வரி என்ற பெயரில் இறைவி உள்ளார். இராமன் வணங்கிய மூலவர் என்ற பெருமை பெற்ற கோயிலாகும்.[1]

அமைப்பு

தொகு

மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது. நுழைவாயில் உள்ள கல்வெட்டு ஒன்றில் ராஜராஜப்பெரும்பள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[1] ராஜகோபுரம், மூலவர் சன்னதி, இறைவி சன்னதி உள்ளிட்ட அமைப்புகளைக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014