நாகமலைத் துர்க்கம்

நாகமலைத் துர்க்கம் அல்லது நாகமலைக் கோட்டை என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோட்டையாகும். இது கிருட்டிணகிரி மாவட்டம், ஜெகதேவி-பர்கூர் நெடுஞ்சாலையில் ஜெகதேவியிலிருந்து 4 கிமீ தொலைவில் சாலையின் வலப்பக்கம் உள்ளது. மலையின் உச்சியில் கோட்டை அரண்களும், இடிபாடுகளுடைய பல கட்டடங்களும், சுனைகளும் காணப்படுகின்றன. இம்மலைக்கோட்டை 2599 அடி உயரமுடையது. கிருட்டிணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள பாராமகால் என்றழைக்கப்படும் பன்னிரண்டு கோட்டைகளில் இது ஒன்றாகும்.[1] .

மேற்கோள்கள்தொகு

  1. தகடூர் வரலாறும் பண்பாடும், இரா.இராமகிருட்டிணன்.பக் 305
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகமலைத்_துர்க்கம்&oldid=3093795" இருந்து மீள்விக்கப்பட்டது