நாகர்கோவில் புத்தகத் திருவிழா
நாகர்கோவில் புத்தகத் திருவிழா என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத் தலைநகரான நாகர்கோவிலில் நடத்தப் பெறும் ஒரு புத்தகக் கண்காட்சியாகும். இப்புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன், இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் சிலவும் கலந்து கொள்கின்றன. இந்தக் கண்காட்சி நாகர்கோவில் புத்தகக் கண்காட்சி எனும் பெயரிலும் அழைக்கப்படுகிறது.
கண்காட்சி அரங்குகள்
தொகுஇக்கண்காட்சியில் பதிப்பகங்கள் அல்லது விற்பனையாளர்களுக்குத் தனித்தனியாக கடைகள் அமைக்கப்படுகின்றன. இந்தக் கடைகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படுகின்றன. பத்து நாட்கள் நடத்தப்படும் இக்கண்காட்சி காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை செயல்படுகிறது.
சிறப்புக் கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள்
தொகுஇக்கண்காட்சியில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை கலை நிகழ்ச்சிகளும், மாலை. 6.00 மணி முதல் 8.00 மணி வரை கவிஞர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், விசாரணை அரங்கம், சுழலும் சொல்லரங்கம் போன்றவை இடம் பெறுகின்றன.