நாகூர் நாகநாதர் கோயில்
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் நாகூர் நாகநாதர் கோயில் எனப்படும் கோயில் உள்ளது. ஆதிசேஷன் சிவபெருமானை பூஜை செய்து அருள் பெற்ற திருத்தலம் நாகூர்.
இறைவன்
தொகுஇத்தலத்தில் உறையும் இறைவன் நாகநாதர் என அழைக்கப்படுகின்றார்.
இறைவி
தொகுஇத்தலத்து இறைவி நாகவள்ளி எனப்படுகிறார்.
சிவராத்திரி தொடர்பு
தொகுநாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ டி.கோவிந்தராஜு, கண்டியூர் வந்த காளத்திநாதன், தினமணி, வெள்ளிமணி, 13.2.2015