நாக்பூர் ஆரஞ்சு

நாக்பூர் ஆரஞ்சு (Nagpur orange) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் நாக்பூர் பகுதியில் வளர்க்கப்படும் ஆரஞ்சு வகையாகும்.[1] [2]

நாக்பூர் ஆரஞ்சு

விவரங்கள்தொகு

இது பழமையான மற்றும் வெளிப்புறம் தழும்புகளுடன் கூடிய இனிமையான மற்றும் கூழுடன் கூடிய பழமாகும். இது நாக்பூர் நகரத்திற்கு அதன் புனைபெயரான ஆரஞ்சு நகரம் என அழைக்கப்பட்ட காரணமாக அமைந்தது. இந்தியாவில் நாக்பூர் ஆரஞ்சுக்கு புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டு, ஏப்ரல் 2014 முதல் நடைமுறையில் உள்ளது.[3]

நாக்பூர் ஆரஞ்சு பருவமழை காலத்தில் மலர்ந்து, டிசம்பர் மாதத்திலிருந்து அறுவடை செய்யத் தயாராக உள்ளது. இங்குள்ள ஆரஞ்சு பயிர் ஆண்டுக்கு இரண்டு முறை பலன் தரக்கூடியது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை கிடைக்கும் பழம் சற்று புளிப்புச் சுவை கொண்டது இது அம்பியா எனப்படும். இதைத் தொடர்ந்து ஜனவரியில் இனிப்பு மிக்க பழம் கிடைக்கின்றது. பொதுவாக, விவசாயிகள் இரண்டு வகைகளில் ஏதேனும் ஒன்றினை விரும்புகின்றனர்.[4]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாக்பூர்_ஆரஞ்சு&oldid=3070545" இருந்து மீள்விக்கப்பட்டது