நாக்ரைட்டு
பைலோசிலிக்கேட்டு கனிமம்
நாக்ரைட்டு (Nacrite) என்பது Al2Si2O5(OH)4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். களிமன் வகை கனிமமான இது பல்லுருவத் தோற்றங்களில் காவோலினைட்டுடன் சேர்ந்து காணப்படுகிறது. ஒற்றைச்சரிவச்சு படிகத் திட்டத்தில் நாக்ரைட்டு படிகமாகிறது. நேர்மறையான அடையாள முடிவுகளுக்கு எக்சு கதிர் விளிம்பு பகுப்பாய்வுகள் அவசியமாகிறது.
நாக்ரைட்டு Nacrite | |
---|---|
நாக்ரைட்டு கனிமம், | |
பொதுவானாவை | |
வகை | பைல்லோசிலிக்கேட்டுகள் காவோலினைட்டு - செர்பண்டைன் குழு |
வேதி வாய்பாடு | Al2Si2O5(OH)4 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
பன்னாட்டு கனிமவியம் சங்கம் நாக்ரைட்டு கனிமத்தை Ncr[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
1807 ஆம் ஆண்டு நாக்ரைட்டு முதன்முதலில் செருமனியிலுள்ள சாக்சானி மாநிலத்தில் கண்டறியப்பட்டது. முத்துப் போன்ற பளபளப்புக்கு தாயாகக் கருதப்படும் நாக்கர் என்ற சொல்லிலிருந்து நாக்ரைட்டு தொகுதி கனிமத்திற்கு இப்பெயர் வந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.