நாசனோவ் சுரப்பி
நாசனோவ் சுரப்பி (Nasonov's gland) என்பது இயக்குநீரை உற்பத்தி செய்யும் சுரப்பி ஆகும். இது தேனீக்களில் பணியமர்த்துவதில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயக்குநீர் வேலைக்கார தேனீக்களைக் குடியேறிய கூட்டத்திற்கு ஈர்ப்பதற்காகவும், கூட்டிற்குத் திரும்பும் வழியை இழந்த தேனீக்களை இழுக்கவும் பயன்படுகிறது. இது வாசனை இல்லாத உணவு மற்றும் நீர் ஆதாரங்களுக்குத் தேனீக்களை இட்டுச் செல்வதற்குப் பயன்படுகிறது. இந்தச் சுரப்பியானது தேனீக்களின் அடிவயிற்றின் பின் பக்கத்தில் அமைந்துள்ளது. இதன் திறப்பு அடிவயிற்றின் நுனியில் கடைசி முதுகுமூடு தகட்டின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது.[1]
இந்த சுரப்பியை முதன்முதலில் 1882-ல் உருசிய விலங்கியலாளர் நிகோலாய் விக்டோரோவிச் நசனோவ் (பிப்ரவரி 14, 1855 - பிப்ரவரி 11, 1939) விவரித்தார்.[2][3][4] நாசனோவ் இந்த சுரப்பி வியர்வையைச் சுரப்பதாகக் கருதினார்.[5] இங்கிலாந்தைச் சேர்ந்த பிரடெரிக் வில்லியம் லம்பேர்ட் சுலேடன் (மே 30, 1876 - 1921) என்பவர் 1901ஆம் ஆண்டில் முதன்முதலில் இச்சுரப்பி இயக்குநீர் ஒன்றினை உற்பத்தி செய்கிறது என்று முன்மொழிந்தார்.[6]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ பி. மாரியப்பன் (2019). "தேனீக்களின் சமுதாய வாழ்க்கை". தேனீ வளர்ப்பு. தஞ்சாவூர்: இயல். p. 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789385283222.
{{cite book}}
: More than one of|at=
and|pages=
specified (help); Unknown parameter|trans_title=
ignored (help) - ↑ Насонов, Н. В. [Nasonov, N.V.] (1885) "О строеніи кожныхъ железъ пчелъ" [On the structure of the skin glands of bees] Известия Императорского Общества Любителей Естествознания, Антропологии и Этнографии: Зоологический Сад и Акклиматизация, Том второй. Годичное Заседание Отделения Беспозвоночных Животных Императорскаго Русскаго Общества Акклиматизации Животных и Растений 27 Июля 1882. [News of the Imperial Society of Lovers of Natural Science, Anthropology and Ethnography: Zoological Garden and Acclimatization, volume two. Annual Meeting of the Department of Invertebrate Animals of the Imperial Russian Society for Acclimatization of Animals and Plants July 27, 1882.] 46:2-3. (in Russian)
- ↑ naturebee (February 13, 2016). "The biography of Nikolai Viktorovich Nasonov". Beesource. பார்க்கப்பட்ட நாள் 30 May 2021.
- ↑ Nasonov's findings were reported to the West in 1883 by A. Zoubareff (also spelled: Zoubarev):
- ↑ (Snodgrass, 1925), p. 114.
- ↑ See: