நாசீசு பிரதாப்கர்கி

நாசீசு பிரதாப்கார்கி (பிறப்பு முகமது அகமது; 12 சூலை 1924 - 10 ஏப்ரல் 1984) [2] இந்தியாவைச் சேர்ந்த உருது கவிஞர் ஆவார். இவர் தனது எண்ணங்கள் மற்றும் உருது கவிதைகளை விரும்புபவர்களுக்கு இடையே தொடர்புகளை உருவாக்கும் திறனுக்காக அறியப்பட்டவர். 

நாசீசு பிரதாப்கர்கி
பிறப்புமுகமது அகமது[1]
(1924-07-12)12 சூலை 1924
பிரதாப்கர், உத்தரப் பிரதேசம்
இறப்பு10 ஏப்ரல் 1984(1984-04-10) (அகவை 59)
லக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா[1]
தேசியம்இந்தியர்
பணிகவிஞர்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

பிரதாப்கர்கி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரை சேர்ந்தவர்.

எழுத்துகள்

தொகு

பிரதாப்கர்கி முக்கியமாக உருது கசல்களை எழுதியுள்ளார். இவர் சீமாப் அக்பரபாடியின் சீடர் ஆவார். நயா சாஸ் நயா அண்டாஸ் என்ற இவரது கசல் தொகுப்பு உத்தரப் பிரதேச உருது அகாதமியால் வெளியிடப்பட்டது.[3] 1983-ல், உருது இலக்கியத்திற்கான இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் காலிப் விருதைப் பெற்றார்.[4]

பிரதாப்கர்கி தனது வாழ்நாள் முழுவதும் நிதி சிக்கல்களை எதிர்கொண்டார். மேலும் இவர் திரைப்படத் துறையை அணுகியபோதும், இவர் தனது பாடல்களை விற்கவில்லை. இதனால் இவர் ஏழையாகவே வாழ்க்கையினை வாழ்ந்தார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Nazish Partap Gadhi - Profile & Biography". Rekhta. 1924-07-12. பார்க்கப்பட்ட நாள் 2020-08-22.
  2. "Urdu Authors: Date Lists. No.1448". Urdu Council.Nic.In. 2006-05-31. Archived from the original on 2012-03-01. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  3. "Poetic Literature". Up Urdu Akademi.Org. Archived from the original on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  4. "List of the Recepients of Ghalib Award – 1983". Ghalib Institute.com. Archived from the original on 2013-10-20. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
  5. "Conversations". Mobi.IBN.In.Com. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாசீசு_பிரதாப்கர்கி&oldid=3677718" இலிருந்து மீள்விக்கப்பட்டது