நாச்சினாம்பட்டி

நாச்சனாம்பட்டி இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், சந்தப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

மக்கள் தொகை விவரம் தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாச்சனாம்பட்டி கிராமத்தில் 271 பேர் உள்ளனர், இதில் 135 பேர் ஆண்கள், 136 பேர் பெண்கள்.

நாச்சனாம்பட்டி கிராமத்தில் 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 21 ஆகும், இது கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 7.75% ஆகும். நாச்சனாம்பட்டி கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 1007 ஆகும். இது தமிழ்நாட்டின் மாநில சராசரியான 996 ஐ விட அதிகம். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாச்சனாம்பட்டியில் குழந்தை பாலின விகிதம் 750 ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரியான 943 ஐ விட குறைவு.

தமிழ்நாட்டை விட நாச்சனாம்பட்டி கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் குறைவாக உள்ளது. அதாவது, 2011 இல், நாச்சனாம்பட்டி கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் 79.20% ஆக இருந்தது. இது தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதமான 80.09% ஐ விடக் குறைவு. நாச்சனாம்பட்டியில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 86.99% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 71.65% ஆகவும் உள்ளது.[1]

மேற்கோள் தொகு

  1. "Nachanampatty Village Population - Harur - Dharmapuri, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாச்சினாம்பட்டி&oldid=3611929" இலிருந்து மீள்விக்கப்பட்டது