நாடகமுறை கற்பித்தல்
நாடகமுறை கற்பித்தல் என்பது இயல்பாக மாணவரிடையே காணப்படும் நடிப்பாற்றலை கற்றலில் பயன்படுத்துவதாகும். ஆரம்ப, நடுநிலை வகுப்பு மாணவர்களுக்கு நாடகமுறையில் கற்பிக்கும் பொழுது பாடப்பொருள் உயிரோட்டம் பெறும்.[1]
படிநிலைகள்
தொகு- நடிப்பதற்கு ஏற்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்தல்
- நடிப்பதற்கு ஏற்ற முறையில் வடிவமைத்தல்
- நாடகமாக நடித்துக் காட்டுதல்
நாடகமுறைக்கான வழிகாட்டுதல்
தொகு- பாடப்புத்தகத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுத்து வகுப்பறையில் படித்து காண்பித்து, வசனங்களை எழுதச் சொல்ல வேண்டும். ஓரங்க வசனமாகவும் அமையலாம்.
- நாடகங்களில் உள்ள பாடத்தொடர்பான நிகழ்வுகளைப் படித்துக் காட்டலாம்.
- வரலாற்று உரையாடல்களைப் படிக்கச் செய்து, அவைகளில் அடங்கியுள்ள வரலாற்று உண்மைகளை எழுதச் சொல்லலாம்.
- பாடங்களை அறிமுகப்படுத்த நடித்துக் காட்டலாம். இது மாணவர்களின் உள்ளங்களை பாடத்தின்பால் கவரும்.
நடிப்பதற்கு ஏற்ற பகுதிகள்
தொகு- உலகத்தில் பற்பல பகுதிகளில் வாழும் மக்கள் தொகை
- அரசியல் சபைகள், அரசியல் ஆலோசனைக் கூட்டங்கள்
- பெரிய தலைவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள்
நடிக்கக் கூடாத பகுதிகள்
தொகு- சண்டைக் காட்சிகள், போர்நிகழ்வுகள், இறக்கும் காட்சிகள், படுகொலைகள், தூக்கிலிடுதல், மனித உருவ அமைப்பை கேலி செய்தல் போன்றவை நடிக்கக் கூடாத பகுதிகள்
நாடகத்தின் வகைகள்
தொகுவ.எண் | வகைப்படுத்துவதற்கான அடிப்படை | வகைகள் |
---|---|---|
1 | கதாப்பாத்திரங்களின் எண்ணிக்கை | தனி நடிப்பு, குழு நடிப்பு |
2 | வசனம் இடம் பெறும் முறை | சொல்சார்ந்த நடிப்பு, செய்கை சார்ந்த நடிப்பு |
3 | அங்கங்களின் எண்ணிக்கை | ஓரங்க நாடகம், பல அங்க நாடகம் |
4 | நாடகம் நிகழ்த்தும் முறை | படிப்பதற்குரியவை, நடிப்பதற்குரியவை |
5 | புலன் அடிப்படை | கேட்பதற்குரியவை, பார்ப்பதற்குரியவை |
6 | குரல் அடிப்படை | ஒருவரே பல கதாப்பாத்திரத்தில் பல குரலில் நடிப்பது, ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் தனித்தனி நபர் நடிப்பது |
மேற்கோள்கள்
தொகு- ↑ வள நூல் குழு (2009). நாடக முறை கற்பித்தல். தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். pp. 181–185.