நாட்குறிப்பு

நாட்குறிப்பு (Diary) என்பது தனி மனிதனின் ஒரு நாளைய நிகழ்வுகளைப் பதிவு செய்வது அல்லது அன்றைய பணிகளைக் குறித்து வைத்துக் கொள்ள உதவும் ஏடு ஆகும். டைஸ் என்ற இலத்தீன் சொல்லுக்கு நாள் என்பது பொருள் இந்த சொல்லிலிருந்து டைரியம் என்னும் இலத்தீன் சொல் உருவானது. இச்சொல்லுக்கு நாட்குறிப்பு என்பது பொருள். இதிலிருந்தே டைரி என்ற ஆங்கிலச் சொல் உருவானது.

நாட்குறிப்பு
முன்பதிவு
கடைசிப்பக்கம்

அமைப்பு

தொகு

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நாட்காட்டிக்கு நிகராக பஞ்சாங்க குறிப்பு, நல்ல நேரம், ராசிபலன், திதிகள், நட்சத்திரபலன், சந்திராஷ்டம தினம், சுபமுகூர்த்த தினங்கள் என 365 பக்கங்களிலும் எளியமுறை விளக்கங்களும், நிகழ்வுகள், விழாக்கள் மற்றும் பொன்மொழிகள் குறிபிடப்பட்டு இருக்கும்.

அன்பளிப்புகள்

தொகு

பெரிய நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு அன்று நாட்குறிப்பு அன்பளிப்பாக வழங்குவது வழக்கம்.

தயாரிப்பு

தொகு

புத்தாண்டு பிறப்பின்போது, நாட்காட்டிக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் வாங்க நினைப்பது நாட்குறிப்புகள்தான். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆண்டுதோறும் மனதை ஈர்க்கும் அட்டைப்படங்கள், புதுப்புது வடிவங்களுடன் பல வகைகளில் நாட்குறிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் மக்களுக்கு அச்சகங்களில் நிரந்தர வேலை கிடைக்கின்றது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்குறிப்பு&oldid=3327054" இலிருந்து மீள்விக்கப்பட்டது