நாட்டடவு (பரதநாட்டியம்)

நாட்டடவு பரதநாட்டியத்தின் அடவு வகைகளில் ஒன்றாகும்.கால்களை நாட்டி ஆடுவதால் நாட்டடவு எனும் பெயர் பெற்றது.இது ஒரு அப்பியாச அடவு ஆகும்.இவற்றின் மொத்த எண்ணிக்கை எட்டாகும்.நாட்டடவு ஆயத்த நிலையான அரைமண்டியில் ஆடப்படும்.இவை அனைத்திற்கும் வித்தியாசமான கையசைவுகளும் காலசைவுகளும் உண்டு.இவை மூன்று காலங்களிலும் (வேகம்) ஆடப்படும்.எல்லா நாட்டடவுகளிற்கும் தாளம் ஆதியாகும்.இவை கண்ணசைவுகளையும் கொண்டிருக்கும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நாட்டடவு_(பரதநாட்டியம்)&oldid=1463075" இலிருந்து மீள்விக்கப்பட்டது