நாணயம் சுண்டல்
இரண்டு நிகழ்தகவுகள் கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் எழுமாறாக ஒன்றைத் தெரிவு செய்வதில் பொதுவாக நாணயச் சுண்டல் (coin flipping அல்லது coin tossing) நடாத்தப்படுகிறது.
பொதுவாக விளையாட்டுப் போட்டிகளில் ஆட்ட நிகழ்வுகளுக்காக அணிகளை ஒழுங்குபடுத்துவதில் நாணயச் சுண்டல் பயன்படுகிறது.
நாணயத்தின் இரு பக்கங்களில்; பெறுமதி பொறிக்கப்பட்ட பகுதி பூ எனவும் அரச இலட்சணை அல்லது இராணி தலை பொறிக்கப்பட்ட பகுதி தலை எனவும் கொள்ளப்படும்.
சுண்டப்படும் முறை
தொகுநாணயம் மடிக்கப்பட்ட சுட்டு விரலின் மீது வைக்கப்படும். பின் பருவிரலின் மூலம் வளியில் சுழன்று செல்லக்கூடியவாறு சுண்டப்படும். வளியில் சுழன்றுகொண்டிருக்கும் போதே தலை, பூ தீர்மானிக்கப்படும்.
கணிதப்பயன்பாடு
தொகுசம நிகழ்தகவுள்ள சந்தர்ப்பங்களில் நாணயச் சுண்டல் பயன்படுத்தப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளிலும் நாணயச் சுண்டல் மேற்கொள்ளப்படலாம்.
இரு தடவைகள் நாணயம் சுண்டப்படும் போது நிகழ்தகவின் பரம்பலை கணித முறையில் குறித்தல்
தொகுஇங்கு சாத்தியமான நிகழ்வுகள்:
{பூ,தலை},{பூ,பூ},{தலை,பூ},{தலை,தலை}
நிகழ்தகவுகள்:
{பூ,தலை}= 1/4
{பூ,பூ} = 1/4
{தலை,பூ}= 1/4
{தலை,தலை} = 1/4