நாணய மாத்திரைகள்

நாணய மாத்திரைகள் (ஆங்கிலம்:Coin capsule) என்பது நாணயச் சேகரிப்பின் போது நாணயத்தின் தரம் குறைந்திடாமல் சேமிக்க உதவும் பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டதாகும். இந்த நாணய மாத்திரைகள் உள்ளிருக்கும் நாணயங்களை தெளிவாக பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. உராய்வை தவிர்க்க நாணயங்களுக்கும் பிளாஸ்டிக் பெட்டிக்கும் இடையே ஸ்பான்ஞ் போன்ற பொருள் வைக்கப்படுகிறது. இதில் நாணயம் நகரா வண்ணம் சரியாக பொருந்திவிடுகிறது. காற்று பூக வண்ணம் மூடப்படும் வசதியுள்ளதால் விலையுயர்ந்த நாணயங்கள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்ட இந்த நாணய மாத்திரைகளை சேகரிப்பாளர்கள் பயன்படுத்துகிறார்கள். [1]

இந்த நாணய மாத்திரைகள் நாணயங்களுக்கு ஏற்ற பல்வேறு அளவில் வெளியிடப்படுகின்றன. [2] சில நாணய மாத்திரைகள் ஒரு முறை காசுகளை வைத்து மூடப்பட்டால் நாணய மாத்திரைகளை உடைக்காமல் திறக்க இயலாத வண்ணம் அமைக்கப்படுகின்றன.

கைகளில் பருத்தி கையுறைகளை அணிந்து கொண்டு நாணயங்களை பருத்தி துணியால் துடைத்து நாணய மாத்திரைகளில் இடுதல் வேண்டும். இவ்வாறு செய்யும் போது நாணயங்களில் நம் கைகளிலிருந்து எண்ணெய் போன்றவை ஒட்டாமல் இருப்பதால் நெடுநாட்களுக்கு நாணயங்கள் பாதுகாப்பாக இருக்கும்.

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. Herbert, Alan (2010). Warman's U.S. Coin Collecting. Krause Publications. p. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781440216374. Archived from the original on 3 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 6 May 2017. {{cite book}}: Check date values in: |archivedate= (help)
  2. Halperin, James L. (2000). The Rare Coin Estate Handbook. Ivy Press. pp. 9–13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0965104128.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாணய_மாத்திரைகள்&oldid=3370231" இலிருந்து மீள்விக்கப்பட்டது