நாணல் (பொதுப் பெயர்)
நாணல் என்பது சில பேரினங்களைச் சேர்ந்த தாவர இனங்களுக்குப் பொதுவாக வழங்கப்படும் பெயராகும். ஈர நிலங்களில் வளரும் இவை புல் போன்று நெடிது வளர்ந்த தாவர இனங்களாகும். நாணற்புல் என்று தமிழில் அழைக்கப்பட்ட போதிலும் இவை புல் இனங்களைச் சேர்ந்தனவன்று. நாணலைக் கோரை என்றும் கூறுவர். நாணல் பாய் தயாரிக்கவும் கூரை வேயவும் பயன்படுகிறது.
நாணல் பற்றிய நாட்டார் பாடல்
தொகுநாணற் பூப்போல நரைத்த கிழவனுக்கு
கும்மாளம் பூப்போல - இந்தக் குமர்தானோ வாழுறது
விளக்கம்: நரைத்த கிழவனொருவனுக்கு இளம் பெண்ணொருத்தியை திருமணஞ் செய்துகொடுக்க அவளது பெற்றோர் எண்ணுகின்றனர். அவ் விளம்பெண்ணுக்காக அவளது தோழி இரங்குகின்றாள். அவள் தனது வெறுப்பைப் புலப்படுத்த நாணலை உவமையாய்க் கொண்டு (இயற்கையான உவமைகளைக் கையாண்டு) பாடுவதே மேற்போந்த நாட்டார் பாடல்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ இப்பாடலை வித்தியானந்தன் 1962, பக்கம் 60 இல் காணலாம்.