நாதன் மகால்
லக்னோ நகரின் முதல் ஆளுநரான சேக் இப்ராகிம் சிசுட்டியின் கல்லறை
நாதன் மகால் (Nadan Mahal) என்பது முகலாயப் பேரரசர் அக்பர் ஆட்சியின் போது [2] இருந்த ஒரு துறவியும் லக்னோவின் முதல் ஆளுநருமான சேக் இப்ராகிம் சிசுட்டியின் கல்லறையாகும். [3] வடஇந்தியாவில் உத்தரப்பிரதே மாநிலத்தின் தலைநகரமாக விளங்கும் லக்னோ நகரில் இக்கல்லறை அமைந்துள்ளது. லக்னோ 16 ஆம் நூற்றாண்டிலிருந்து முகலாயப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவாத்தின் முசுலீம் நவாப்கள் நகரத்தை தங்கள் தலைநகராக மாற்றியுள்ளனர்.
இடம் | நாதன் மகால் சாலை, இலக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா |
---|---|
வகை | கல்லறை |
கட்டுமானப் பொருள் | கல் |
துவங்கிய நாள் | 1790 |
முடிவுற்ற நாள் | 1800 |
அர்ப்பணிப்பு | சேக் இப்ராகிம் சிசுட்டி[1] |
விடுதலையின் கல்லறை என்ற பெயராலும் இக்கல்லறை அடையாளப்படுத்தப்படுகிறது. [4] நாதன் மகாலும் அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட ஆலம்கீர் பள்ளிவாசலும் லக்னோ நகரிலுள்ள மிகப்பழமையான நினைவுச் சின்னங்களாக கருதப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The tomb of Shaikh Ibrahim Chishti (d. 1543) at the Nadan Mahal, Lucknow". British Library. பார்க்கப்பட்ட நாள் 16 October 2013.
- ↑ "Inscribed on the back in ink: 'Niran Mahl near Lucknow and Mosque built in the time of the Emperor Ackbar.'". British Library. பார்க்கப்பட்ட நாள் 16 October 2013.
- ↑ Karen Schreitmüller; Mohan Dhamotharan; Beate Szerelmy (2009). India (1st ed.). Ostfildern-Kemnat: Baedeker. p. 276. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783829766227.
- ↑ "Sheikh's followers prayed for nidan (deliverance) at his tomb". Lucknow. பார்க்கப்பட்ட நாள் 16 October 2013.