நாதியா சுகாம்சுகா

நாதியா சகாம்சுகா (Nadia Zakamska) ஓர் உருசிய-அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.[1]

நாதியா சுகாம்சுகா
படித்த இடங்கள்MIPT Department of General and Applied Physics
பணிவானியல் வல்லுநர்
விருதுகள்வானியல் துறையில் நியூட்டன் இலேசி பியர்சுப் பரிசு
இணையம்https://physics-astronomy.jhu.edu/directory/nadia-zakamska/
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்வானியல்

இளமையும் கல்வியும் தொகு

இவர் மாஸ்கோ இயற்பியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் இளவல் பட்டமும் 2001 இல் கோட்பாட்டு இயற்பியலில் முதுவர் பட்டமும் பெற்றார். பின்னர் இவர் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கு 2005 இல் முனவர் பட்டம் ஈட்டினார்.[1][2]

வாழ்க்கைப் பணியும் ஆராய்ச்சியும் தொகு

இவர் வகை இரண்டு குவேசார்களின் பன்முக அலைநீளங்களைப் பற்றி ஆய்வு செய்கிறார்.[3] மேலும் இவர் மீப்பொருண்மைக் கருந்துளைகளைப் பற்றியும் பால்வெளி உருவாக்கத்தின் அவற்றின் பாத்திரம் பற்ரியும் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.[2] மேலும் இவர் புறவெளிக் கோள்கள் பற்றியும் புறவெளிப் பால்வெளி வானியலிலும் பற்றியும் ஆய்வு செய்கிறார்.[2]

தகைமைகளும் விருதுகளும் தொகு

சகாம்சுகா சுலோவான் ஆய்வுறுப்பினர்.[1] இவர் 2014 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் நியூட்டன் இலாசி பியர்சு பரிசைப் பெற்றார். இது நோக்கீட்டு வானியலில் குறைந்தது ஐந்தாண்டுகள் தொடர்ஆராய்ச்சிப்பணி புரிந்தவருக்குத் தரப்படுகிறது.[3]

வெளியீடுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Nadia Zakamska | Physics & Astronomy". physics-astronomy.jhu.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-06-21.
  2. 2.0 2.1 2.2 "Nadia Zakamska". Institute for Advanced Study. பார்க்கப்பட்ட நாள் 2016-06-21.
  3. 3.0 3.1 "Newton Lacy Pierce Prize in Astronomy | American Astronomical Society". aas.org. பார்க்கப்பட்ட நாள் 2016-06-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதியா_சுகாம்சுகா&oldid=2734534" இலிருந்து மீள்விக்கப்பட்டது