நாதைன் ஜி. பர்லோ
நாதைன் ஜி, பர்லோ (Nadine G. Barlow)ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் இப்போது வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வானியல் துறையின் பேராசிரியராக உள்ளார். இவர் 2010 இல் இத்துறையின் இணைத்தலைமை வகிக்கலானார். இவர் இப்பல்கலைக்கழக நாசா விண்வெளி நல்கைத் திட்ட்த்தின் இயக்குநரும் ஐசோனா விண்வெளி நல்கைக் கூட்டமைப்பின் இணை இயக்குநரும் ஆவார்.
நாதைன் ஜி. பர்லோ Nadine G. Barlow | |
---|---|
பிறப்பு | இலா ஜோல்லா, கலிபோர்னியா |
தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
துறை | கோள் அறிவியல் |
பணியிடங்கள் | நிலா, கோள் அறிவியல் நிறுவனம் நாசா நடுவண் புளோரிடா பல்கலைக்கழகம் வடக்கு அரிசோனா பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | அரிசோனா பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | இராபர்ட் ஜி. சுட்டார்ம் |
வாழ்க்கைப்பணி
தொகுஇவர் தன் வாழ்க்கையில், பலோமார் கல்லூரி, அவுசுட்டன் கிளயர் இலேக் பல்கலைக்கழகம், நடுவண் புளோரிடா பல்கலைக்கழகம் ஆகிய நிறுவன்ங்களில் கல்வி கற்பித்துள்ளார். இப்போது இவர் வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பித்து வருகிறார். இவர் நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திலும் நிலா, கோள் நிறுவனத்திலும் அமெரிக்க புவியியல் அளக்கையிலும் . அரிசோனா, பிளாகுசுட்டாப் வான்புவியியல் மையத்திலும் ஆய்வு செய்துள்ளார். இவர் ஆர்லண்டோவில் அமைந்த நடுவண் புளோரிடா பல்கலைக்கழகத்தின் இராபின்சன் வான்காணகத்தின் முதல் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
பின்வருவன உட்பட, பர்லோ நாசாவின் நிலா, கோள் அறிவியல் திட்டங்களில் பணியாற்றியுள்ளார் :
- செவ்வாய் நடுவண் பள்ளக் குழிப்பள்ளங்களின் விரிநிலை ஆய்வு
- செவ்வாயின் அரேபியத் தரையின் ஆவியாகுந்திறச் செழும்பொருள் காட்டிகளின் ஆய்வு
- நிலா மொத்தல் குழிப்பள்ளங்களின் புவித் தகவல் அமைப்புத் தரவுத்தளம்
- கனிமீடு மொத்தல் குழிப்பள்ள புறவடிவியல் பகுப்பாய்வு
- செவ்வாய் மொத்தல் குழிப்பள்ளங்களின் புவித் தகவல் அமைப்புத் தரவுத்தளமும் கருவிகளும்
- செவ்வாய் மொத்தல் குழிப்பள்ளங்களின் புறவடிவியலும் புறவடிவளவையியலும் பற்றிய ஆய்வுகள்
இவர் உலகச் செவ்வாய் உயர்தகைமை அறிஞர்களில் ஒருவராவார்.[1]
தகைமைகளும் விருதுகளும்
தொகுபர்லோ 2002 இல் செந்தகவு பட்டப்படிப்பு பயிற்றுவிப்பு விருது நடுவண் புளோரிடா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது இவருக்கு 2002-2003 பலோமர் குமுக கல்லூரி முன்னாள் மாணவர் விருது வழங்கப்பட்டது. இவரது நினைவாக 1999 இல் சிறுகோள் 15466 பர்லோ பன்னாட்டு வானியல் ஒன்றியத்தால் பெயரிடப்பட்டது.[2]
தேர்ந்தெடுத்த பணிகள்
தொகு- செவ்வாய் அகமும், மேற்பரப்பும் வளிமண்டலமும் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521852265 (2008)
- விண்வெளி அறிவியல் புலங்கள் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 002865546X (co-editor, 2002)
- புவி அறிவியல் புலங்கள் களஞ்சியம் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0028830008 (co-editor, 1996)