நான்காம் அனைத்துலகம்

நான்காம் அனைத்துலகம் (Fourth International) என்பது லியோன் திரொட்சுகி அவர்களின் தலைமையில் தொழிலாளர்களின் சமவுடமை ஆட்சியை கொண்டு வருவ உதவுவதற்கென அமைக்கப்பட்ட ஒரு அனைத்துலக இடதுசாரி அமைப்பு ஆகும். இந்த அமைப்பு சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட திரெட்சுகி, அவரது சார்பாளர்கள், இசுராலின் எதிர்பாளர்கள், பொதுவுடமை மிதவாதிகள் போன்றோரால் 1938 ம் ஆண்டு நிறுவப்பட்ட அமைப்பு ஆகும். இது இதற்கு முன்னரான மூன்று அனைத்துலகங்களினது தொடர்ச்சி அமைப்பாகக் தன்னைக் கருதிக் கொண்டாலும், அக் காலத்தில் பரந்த ஆதரவைப் பெறவில்லை. சோவியத் ஒன்றியத்தின் ஒற்றர்கள், இரகசிய காவலர்கள் இந்த அமைப்பை குலைக்கும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_அனைத்துலகம்&oldid=1828732" இலிருந்து மீள்விக்கப்பட்டது