நான்முக சூலக்கல்

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வாழமங்கலம் கிராமத்தில்,மூன்றாம் குலோத்துங்க சோழர் ஆட்சியில் கீரனூர் சிவன் கோவிலுக்கு தேவதானம் வழங்கியதை அடையாளப்படுத்தும் நான்முகச் சூலக்கல் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக கள ஆய்வில் அடையாளப்படுத்தப்பட்டது.

SOOLAKKAL

சூலக்கல் வரலாறு

தொகு

தேவதானமாக வழங்கப்படும் நிலங்களை அடையாளப்படுத்தும் வகையில் வைணவ கோயில்களுக்கு (பெருமாள் கோயில்) சங்கு சக்கர குறியீடு பொறித்த திருவாழிக்கல்லும், சமண கோயில் நிலங்களுக்கு முக்குடைக்கல்லும், சைவக்கோயில்களான சிவன் , காளி , அய்யனார், உள்ளிட்ட கோயில் நிலங்களில் திரிசூலக்குறியுடைய கற்களும் நடப்பட்டிருப்பது பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நில அளவை செய்த சோழர்கள்

தொகு

இராஜராஜன் மற்றும் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் நிலம் அளக்கப்பெற்று நிலத்திற்கு எல்லைக்கற்கள் நடப்பட்டதை கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன. அதேபோல் பரகேசரி வர்மன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் இந்நடைமுறை பின்பற்றபட்டதோடு, ஒரு சில கிராமங்களில் ஊரார்களிடம் வேளாண் நிலங்கள் பெறப்பட்டு அவை கோயில்களுக்கு வரி நீக்கப்பட்ட இறையிலி தேவதானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் கோவிலின் அன்றாட வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

வாழமங்கலம் தேவதான நிலத்தில் சூலக்கல்

தொகு

வாழமங்கலம்[1] கிராமத்தின் வயல்வெளியில் உள்ள சூலக்கல்லின் இரு இருபுறங்களில் நின்ற நிலையில் காளையும்[2] அதன் பின்புலத்தில் சூலக்குறியும்

படிமம்:சோழர் கால நான்முகச் சூலக்கல்.jpg
SOOLAKKAL

பொறிக்கப்பட்டுள்ளது. ஏனைய இரு புறங்களிலும் சூலக்குறி மட்டுமே காணப்படுகிறது. இது சிவன் கோவிலுக்கு தேவதானம் வழங்கப்பட்ட இடத்தைக் குறிக்கவே நடப்பட்டிருக்கவேண்டும் எனக்கருதி இது குறித்த வரலாற்று சான்றுகளை ஆய்வு செய்தபோது புதுக்கோட்டை சமத்தான கல்வெட்டு 145 ல்மூன்றாம் குலோத்துங்க சோழனின் எட்டாவது ஆட்சியாண்டின் 258 வது நாள் அதாவது கி.பி 1185 – 86 ஆண்டில் தேவதானம் வழங்கப்பட்ட தகவல் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் வாளுவமங்கலம் என்று அந்நாளில் அழைக்கப்பட்ட வாழமங்கலம் ஊரவர் கீரனூர் சிவன் கோவிலுக்கு நிலக்கொடை அதாவது தேவதானம் வழங்கிய செய்தி[2][தொடர்பிழந்த இணைப்பு] இருப்பதை அறிந்து கீரனூர் சிவன் கோவிலில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன் கோபுரத்தின் வடபுறச்சுவரின் உட்புறம் இருபத்தைந்து வரிகளையுடைய கல்வெட்டுச்செய்தி 800 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சூலக்கல்[3] நடப்பட்டிருப்பதை உறுதி செய்தது.

மேலும் வாழமங்கலம் கிராமத்திலுள்ள பிள்ளையார் கோவில் அருகே சிதிலமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட துண்டுக்கல் ஒன்றில் (குலோ)”த்துங்க சோழ தேவர்க்கு யாண்டு “ என்ற செய்தி பொறிக்கப்பட்டுள்ளது இந்தச் சான்றின் மூலம் வயலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சூலக்கல் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் நடப்பட்டதாக இருக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்முக_சூலக்கல்&oldid=3877538" இலிருந்து மீள்விக்கப்பட்டது