நாபா கிசோர் ரே

இந்திய வேதியியலாளர்

நாபா கிசோர் ரே (Naba Kishore Ray) இந்தியாவைச் சேர்ந்த கோட்பாட்டு மற்றும் கணக்கீட்டு வேதியியலாளர் ஆவார். 1940- 2013 [1] ஆம் ஆண்டு காலத்தில் இவர் வாழ்ந்தார். மூலக்கூறுகளின் கட்டமைப்பு குறித்த ஆய்வுகளுக்கு பெயர் பெற்றவராக இருந்தார். [2] டிசம்பர் 5, 1940 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று இந்திய மாநிலமான ஒடிசாவில் கிசோர் பிறந்தார்.[3] மூலக்கூறு சுற்றுப்பாதை மற்றும் மிதக்கும் கோள காசியன் சுற்றுப்பாதை முறைகளைப் பயன்படுத்தி மூலக்கூறுகளையும், அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் எலக்ட்ரான் அடர்த்தி மற்றும் வேகப் பகிர்வு தொடர்பான ஆய்வுகளை கிசோர் மேற்கொண்டார். மேற்பரப்புகளில் மூலக்கூறுகளின் வினைத்திறன் பற்றிய பணிகளையும் ஆய்வு செய்து இப்பொருள் குறித்த புரிதலை விரிவுபடுத்தினார்.[4]

நாபா கிசோர் ரே
Naba Kishore Ray
பிறப்பு(1940-12-05)திசம்பர் 5, 1940
ஒடிசா, இந்தியா
இறப்புமே 8, 2013(2013-05-08) (அகவை 72)
தேசியம்இந்தியர்
துறை
  • கோட்பாட்டு வேதியியல்
  • கணக்கீட்ட்டு வேதியியல்
அறியப்படுவதுமூலக்கூறுகளின் கட்டமைப்பு
விருதுகள்

விஞ்ஞான ஆராய்ச்சிக்காக இந்திய அரசின் உச்ச நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் வேதியியல் அறிவியலுக்கான பங்களிப்புகளுக்காக 1983 ஆம் ஆண்டில், மிக உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி சுவரூப் பட்நகர் பரிசை கிசோருக்கு வழங்கியது. [5]

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு

Alan Hinchliffe (2008). Chemical Modelling: Applications and Theory. Royal Society of Chemistry. பக். 309–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85404-248-7. https://books.google.com/books?id=8Wx-4vQJb98C&pg=PA309. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாபா_கிசோர்_ரே&oldid=3560490" இருந்து மீள்விக்கப்பட்டது