நாய்கள் ஜாக்கிரதை (அறிவிப்பு)
நாய்கள் ஜாக்கிரதை (நாய் ஜாக்கிரதை என்றும் வழங்கப்படுகிறது) என்பது ஒரு கட்டிடம் அல்லது பிற தனியார் பகுதியின் நுழைவாயிலில் ஒரு ஆபத்தான நாய் உள்ளே இருப்பதைக் குறிக்கும் எச்சரிக்கை பலகையாகும். நாய் இல்லாவிட்டாலும், அல்லது நாய் திறமையான காவலாளி நாயாக இல்லாவிட்டாலும், திருட்டைத் தடுக்க இத்தகைய அடையாளங்கள் வைக்கப்படலாம்.[1][2]
வரலாறு
தொகுநாய்கள் ஜாக்கிரதை போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் பொம்பெயில் உள்ள சோகக் கவியின் மாளிகை போன்ற பண்டைய உரோமை கட்டிடங்களில் காணப்படுகின்றன. இதில் தலைப்புடன் பல வண்ண தரை ஓடுகள் கூட உள்ளன. இந்த எச்சரிக்கைகள் சில சமயங்களில் வாசகரைப் பாதுகாக்காமல் நாயைப் பாதுகாக்கும் நோக்கமாக இருக்கலாம். இது இத்தாலிய வேட்டை வகையைச் சேர்ந்த சிறிய, மென்மையான மற்றும் அழகான நாய்களைப் பார்வையாளர்கள் மிதிப்பதைத் தடுக்கிறது.[3]
பெட்ரோனியசு எழுதிய உரோமானியப் படைப்பான சத்ரிகான், இந்த சொற்றொடரைக் குறிப்பிடும் ஒரு பகுதியை உள்ளடக்கியுள்ளது. டின்னர் வித் டிரிமால்ச்சியோ என்ற அத்தியாயத்தில், பெரிய எழுத்துக்களுடன் சுவரில் இந்த வாசகம் வரையப்பட்டுள்ளது.[4]
பிலிப்பியர் 3:2 கிங் ஜேம்சு விவிலியம் மற்றும் பல பதிப்புகளில் "நாய்கள் ஜாக்கிரதை" அல்லது "நாய்களிடம் ஜாக்கிரதை" என்று இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[5] உதாரணத்திற்கு:
“ | நாய்களிடம் ஜாக்கிரதை, தீய வேலையாட்களிடம் ஜாக்கிரதை, வெட்டுகை ஜாக்கிரதை. | ” |
இது பெரும்பாலும் ஒரு இடக்கரடக்கல்லாக விளக்கப்படுகிறது, முந்தைய விவிலியப் பத்திகளில் கெட்ட மனிதர்கள் நாய்களாக விவரிக்கப்பட்டுள்ளனர்.[6] ஆயினும்கூட, முற்றத்தின் அடையாளங்கள் சில நேரங்களில் பத்தியைக் குறிக்கும் வகையில் குறிப்பிடப்படுகின்றன.[7][8] உரோமானிய உலகில் இத்தகைய அடையாளங்களின் பயன்பாடு இதனை எழுதிய ஆசிரியரைப் பாதித்திருக்கலாம்,[9] மாறாக, பத்தியானது மிகவும் நவீன முற்றத்தின் அடையாளங்களின் வார்த்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.[10]
சட்டம்
தொகுஆங்கிலச் சட்டத்தின் கீழ், இத்தகைய அடையாளத்தை வைப்பது, நாயால் தாக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு தீங்குக்கும் உரிமையாளரைப் பொறுப்பிலிருந்து விடுவிக்காது.[11][12] ஒரு நிறுவனம் ஒரு காவலர் நாயின் சேவையைப் பயன்படுத்தினால், காவலர் நாய்கள் சட்டம் 1975-ன் அத்தியாயம் 50ன் படி "காவல் நாய்" உள்ளது என்ற எச்சரிக்கை அடங்கிய அறிவிப்பு வளாகத்தின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும். பல சமயங்களில், பாதுகாப்பு அடையாளங்கள் மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி எச்சரிக்கைகள் மற்றும் காவல் நாய் எச்சரிக்கை இரண்டையும் ஒரே அடையாளமாக ஒருங்கிணைக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ R Wright, RH Logie (1988), "How young house burglars choose targets", The Howard Journal of Criminal Justice, 27 (2): 92–104, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1111/j.1468-2311.1988.tb00608.x
- ↑ Wilkinson, C. (1998) ‘Deconstructing the Fort: The Role of Postmodernity in Urban Development’, Journal of Australian Studies June: 22(57):194-205.
- ↑ Cheryl S. Smith (2004), The Rosetta bone, pp. 10–11, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7645-4421-7
- ↑ Petronius. Satyricon.
- ↑ ◄ Philippians 3:2 ► Bible Hub
- ↑ Why to Beware of Dogs?
- ↑ Warning: Beware of Dogs
- ↑ Onward & Upward: Philippians 3:12-16
- ↑ The IVP Bible Background Commentary: New Testament
- ↑ Beware of dogs
- ↑ James Paterson (1877), Commentaries on the Liberty of the Subject and the Laws of England, p. 271
- ↑ Charles G. Addison, Horace Gray Wood (1876), A treatise on the law of torts, p. 285
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Dog-related warning signs தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Guard Dogs Act 1975
- Beware of Dog Sign Printable