நாய்ச்சண்டை

(நாய்ச் சண்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நாய்ச்சண்டை (dogfight) என்பது வான்போரில் ஈடுபடும் சண்டை விமானங்கள் பங்கேற்கும் ஒரு சண்டை வகை. பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விமானங்கள் இச்சண்டையில் பங்கேற்கின்றன. பங்கேற்கும் விமானங்கள் அருகில் எதிரி விமானங்கள் உள்ளன என்பதை உணர்ந்தே சண்டையில் ஈடுபடுகினறன. குறுகிய எல்லைக்குள் அதிவேகத்தில் நடக்கும் இச்சண்டையின் இலக்கு எதிரி விமானத்தை வீழ்த்துவதே. இதற்காக துப்பாக்கிகள், ஏவுகணைகள் போன்ற ஆயுதங்களை விமானங்கள் பயன்படுத்துகின்றன.[1][2][3]

நாய்ச்சண்டை பயிற்சியில் ஈடுபடும் அமெரிக்க வான்படை எப்-22 வகை விமானங்கள்

விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் நடைபெற்ற முதல் பெரிய போர் முதலாம் உலகப் போர். இப்போரில் தான் முதன் முதலில் விமானங்கள் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் எதிரிகளின் தரைப்படைகள் மீது குண்டு வீசவும், உளவு பார்க்கவும் மட்டுமே விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. பின்னர் இரு தரப்பு விமானங்களும் நடு வான்வெளியில் ஒன்றோடு ஒன்று மோதத் தொடங்கின. “நாய்ச்சண்டை” என்ற பெயர் இவ்வாறு தான் ஏற்பட்டது. நாய்க்கூட்டங்கள் மூர்க்கத்துடன் சாகும்வரை ஒன்றையொன்று தாக்கிச் சண்டையிடுவது போல இந்த சண்டை முறை அமைந்திருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது. 1919ம் ஆண்டே “நாய்ச்சண்டை” என்ற தொடர் அச்சில் வந்து விட்டாலும், இரண்டாம் உலகப் போரில் தான் பிரபலமானது. தற்கால வான்படை விமானிகளுக்கு நாய்ச்சண்டை உத்திகளில் பயிற்சி அளிப்பது இன்றியமையாததாகி விட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Robert Shaw, Fighter Combat: Tactics and Maneuvering, pp. xi, xii
  2. Hallion, Richard P. (1992). Storm Over Iraq: Air Power and the Gulf War. Smithsonian Institution Press. pp. 1–10.
  3. Roblin, Sebastien (December 11, 2018). "The F-22 and F-35 Will Be Obsolete: What Will a Sixth-Generation Fighter Look Like?". The National Interest. Archived from the original on December 16, 2018. பார்க்கப்பட்ட நாள் December 16, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாய்ச்சண்டை&oldid=4144376" இலிருந்து மீள்விக்கப்பட்டது