நாராயண ராவ் தர்லே

இந்திய அரசியல்வாதி

நாராயண ராவ் தர்லே (Narayan Rao Tarale) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். தோராயமாக 1936 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் கர்நாடக அரசியலில் சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாராயண ராவ் தர்லே
Narayan Rao Tarale
கர்நாடக சட்டப் பேரவை
பதவியில்
1994–1999
முன்னையவர்பாபுசாகேப் ரைசாகேப் மகாகோங்கர்
பின்னவர்குடாச்சி இரமேசு இலட்சுமன்
தொகுதிபெலகாவி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅண். 1936
இறப்பு24 நவம்பர் 2019 (வயது 83)
அரசியல் கட்சிசுயேச்சை

வாழ்க்கை வரலாறு தொகு

தரலே 1994 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலம் பெல்காம் தொகுதியிலிருந்து கர்நாடக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] கல்வி நிறுவனத்தை நடத்தும் மராத்தா மண்டலத்தின் துணைத் தலைவராக இருந்தார்.[3] மகாராட்டிரா ஏகிகரன் சமிதியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தரலே, ஒரு மராத்தி ஆர்வலர் ஆவார். இவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை மகாராட்டிராவுடன் பெலகாவியை இணைக்கக் கோரிய போராட்டங்களில் பங்கேற்றார்.

தரலே 24 நவம்பர் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று தனது 83 ஆவது வயதில் இறந்தார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Belgaum Assembly Constituency Election Result". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 24 November 2019.
  2. "Karnataka Assembly Election Results in 1994". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 24 November 2019.
  3. "Former MLA dead". The Hindu. 25 November 2019. பார்க்கப்பட்ட நாள் 25 November 2019.
  4. "Former MLA Narayan Rao Tarale passes away". United News of India. 24 November 2019. பார்க்கப்பட்ட நாள் 24 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண_ராவ்_தர்லே&oldid=3865485" இலிருந்து மீள்விக்கப்பட்டது