நார்த் 24 காதம் (திரைப்படம்)

நார்த் 24 காதம் (North 24 Kaatham) என்பது மலையாளத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் தலைப்பிற்கு தமிழில் வடக்கு 24 மைல் என்று பெயர். இத்திரைப்படத்தை இயக்கியவர் அனில் ராதாகிருஷ்னன் மேனன் ஆவார். இத்திரைப்படத்தில் ஃபகத் பாசில், நெடுமுடி வேணு மற்றும் சுவாதி ரெட்டி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தியதி ஓணம் பண்டிகையின் போது வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் இசையமைப்பாளராக கோவிந்த மேனன் மற்றும் ரெக்ஸ் விஜயன் பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படத்தை சி. வி. சாரதி என்பவர் தயாரித்திருந்தார்.

நார்த் 24 காதம்
இயக்கம்அனில் ராதாகிருஷ்ணன் மேனன்
தயாரிப்புசி. வி. சாரதி
கதைஅனில் ராதாகிருஷ்ணன் மேனன்
இசைகோவிந்த மேனன், ரெக்ஸ் விஜயன்
நடிப்பு
ஒளிப்பதிவுஜெயேஸ் நாயர்
படத்தொகுப்புதிலீப்
வெளியீடு15 செப்டம்பர் 2013
நேரம்125 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்