நாற்காலி

நாற்காலி (Chair) என்பது அமர்வதற்காக உருவாக்கப்பட்டது.பொதுவாக, ஓர் இருக்கையும், சாய்வதற்கேற்ற பின்பகுதியையும், நான்கு கால்களையும் கொண்டிதாக அமைக்கப்பட்டிருக்கும். கைபிடிகளையும் கொண்டிருக்கலாம். சாயும் பின்பகுதியற்றவை புட்டுவம் என்றும் இலங்கையில் அழைப்பர். உடல் இயக்கவியல் அறிவியல் தத்துவம் பல கொண்டு, தற்காலத்தில் இவை உருவாக்கப்படுகின்றன. ஏனெனில், அதிக நேரம் இருக்கையில் அமர்வோருக்கு, பின்னாளில் பல்வேறு உடலியல் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக முதுகு தண்டிலும், வயிற்றிலும் நோய்கள் உருவாகின்றன.

Chair-black and white drawing.jpg

அவரவர் உடலுக்கு ஏற்றவாறு, பணிக்கு தகுந்த படி நாற்காலியை பயன்படுத்துதல் சிறந்த மருத்துவ ஆலோசனையாகக் கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாற்காலி&oldid=2740735" இருந்து மீள்விக்கப்பட்டது