நாற்பொருள்

தமிழ் சிவனியக்(சைவ சித்தாந்த) கருத்தாக்கவியலில் அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கும் நாற்பொருள்கள் அல்லது நாற்புருடார்த்தம் எனப்படுகின்றன.

மனித வாழ்க்கையின் வாழ்வியல் முறைகளாகவும் இந்நாற்புருடார்த்தங்களும் கருதப்படுகின்றன. அறத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் துய்த்து வீடுபேறடைதல் என்பதுவே இவ்வழி முறையாகும்.

திருவள்ளுவர் திருக்குறளிலே அறம், பொருள், இன்பம் என முப்பாலினைப் பாடியுள்ளார். முதல் மூன்று பொருளையும் கடைப்பிடிக்கும் ஒருவருக்கு வீடுபேறு பற்றிப் போதிப்பது தேவையில்லை என விட்டுவிட்டதாக சில ஆய்வாளர்கள் விமர்சிப்பர்.

காலப்பாதையில் நாற்பொருள் பாகுபாடு
இம்மை - மறுமை, இவ்வுலகம் - அவ்வுலகம், துறக்கம் பற்றிய எண்ணங்கள் தமிழர்களிடம் இருந்தன. என்றாலும் நாற்பொருள் என்னும் பாகுபாடு திருஞானசம்பந்தர் பாடலில்தான் தமிழிலக்கிய காலப்பாதையில் முதன்முதலாகக் காணப்படுகிறது.[1]
"சைவவேடம் தான் நினைந்து ஐம்புலனும் - அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு - மொழிந்த வாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே" - என்பது சம்பந்தர் பாடல்.

அடிக்குறிப்பு தொகு

  1. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 1

மேற்கோள்கள் தொகு


தமிழ் தொடர்பான இந்தக் குறுங்கட்டுரையைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாற்பொருள்&oldid=3589548" இலிருந்து மீள்விக்கப்பட்டது