நாலுமூலைக் கல்
நாலுமூலைக் கல் சிறுவர் தொட்டு விளையாடும் விளையாட்டு.
ஆடும் முறை
தொகுவிளையாடுவோர் எல்லாரும் தெருப்புழுதியில் வரிசையாகக் காலால் தேய்த்துப் படத்தில் உள்ளது போல் விளையாடும் கட்ட அரங்கு அமைப்பர். மொத்தம் ஐந்து பேர் விளையாடுவர். அரங்கின் மையத்தில் 4 கல் வைக்கப்படும். ஒருவர் பட்டவராகத் தெரிந்தெடுக்கப்படுவார். அவர் கல்லை எடுக்க வருபவரைத் தொடுவார். மற்றவர்கள் கோட்டில் ஓடுவர். கோட்டில் ஓடுபவரைத் தொடக்கூடாது. கோட்டில் கால் இல்லாதவர் கல்லை எடுக்க வருபவராகக் கருதப்படும். அவரைத் தொடலாம். தொடப்பட்டவர் பட்டவராகித் தொடுபவராக மாறுவார்.
ஓடுபவர் நடுவில் இருக்கும் கல்லை ஒவ்வொன்றாகவோ பலவாகவோ எடுத்துவந்து மூலைக்கு ஒன்றாக வைக்கவேண்டும். இரண்டு கல் வைத்துக்கொண்டு ஓடுபவரும் தொடப்படலாம். நாலு கல்லும் நாலு மூலைகளில் வைக்கப்பட்டுவிட்டால் மறு ஆட்டம்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுகருவிநூல்
தொகு- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980